Insurance: Facts

Insurance: Facts

இன்சூரன்ஸ் என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் பதறுகிறார்கள்,ஆனால் இதன் அத்தியாவசியத்தை உணர்ந்தவர்கள் சில பேர் மட்டுமே.அப்படி இருக்கையில் இன்சூரன்ஸ் பற்றிய பொதுவான விஷயங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

இன்சூரன்ஸ் – Insurance: Facts

1.) அனைத்து வங்கிகளும் எப்படி Reserve Bank Of India-வின் கீழ் வருகிறதோ,அதே போல் Insurance company-கள் அனைத்தும் Indian Finance Ministry-க்கு கீழ் வருகிறது.

2.) Telephone Company-கள் அனைத்திற்கும் எப்படி TROY என்ற Control Board உள்ளதோ,அதே போல் Insurance Company-கள் அனைத்திற்கும் இருக்கும் Contral Board தான் IRDA,அதாவது Insurance Regulatory and Development Authority.

3.) இன்சூரன்ஸ் எப்படி ஆரம்பித்தது?

1956-ல் அரசாங்கத்திற்கு கீழ் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் LIC,ஆனால் 2000த்தில் தான் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு அரசு அனுமதி வழங்க ஆரம்பித்தது.

4.)இன்சூரன்ஸ் என்பது என்ன?

இன்சூரன்ஸ் என்பது நாம் ஒரு வாகனத்தை வாங்குவது போல் அல்ல,காப்பீடு செய்யும் நபர்களை உடனடியாக இது மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடாது,ஆனால் காப்பீடு செய்யப்பட்ட நபருக்கோ (அல்லது) காப்பீடு செய்யப்பட்ட பொருளுக்கோ ஏதேனும் விபத்து ஏற்பட்டால்,அதனை சரி செய்ய பொருளாதார ரீதியில் பெரும் பக்க பலமாய் இருந்து உதவும்.

5.) மேலை நாடுகள்: மேலைநாடுகளில் கட்டாயமாக இருக்கும் காப்பீடுகள்,நம் நாட்டில் கட்டாயமாக்கப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

6.) இன்சூரன்ஸ் கம்பெனிகள்: அமெரிக்காவில் உள்ள இன்சூரன்ஸ்
Company-கள் மொத்தம் 5997 ஆகும்,ஆனால் இந்தியாவில் உள்ள மொத்த இன்சூரன்ஸ் கம்பெனிகளின் எண்ணிக்கை மொத்தம் 33 மட்டுமே.இது வருத்தப்பட வேண்டிய விஷயம் என்றாலும்,தற்போது இந்தியாவில் இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு பெருகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Top 5 Mysteries of the World

விஞ்ஞானிகளை அதிர வைத்த 5 பழங்கால மர்மங்கள்!

ஆயிரம் ஆயிரம் வருடங்களாக மண்ணில் புதைந்து இருக்கும் மனிதர்களின் பழங்கால நாகரிகத்தை அறிய தொல்லியல் வல்லுநர்கள் படும் பாடு என்னவென்று நம் அனைவருக்கும் தெரியும்.ஆனாலும் அகழ்வாராய்ச்சியில் சிக்கும் சில பொருட்கள் தொல்லியல் வல்லுநர்களை தலை சுற்ற வைக்கிறது.அப்படி இருக்கும் 5 மர்மங்களை பற்றி இப்போது பார்க்கலாம்,

Band of Holes:

பெருவில் நாஸ்கா பீடபூமியில் பிஸ்கோ பள்ளத்தாக்கில் சுமார் 5,000-6,000 வரை உள்ள சிறு குழிகளின் தொடர்ச்சி காணப்படுகிறது.இக்குழிகள் 1.5கிமீ அளவுக்கு நீளமாக சென்று ஒரு மலையில் சேர்கிறது.அக்காலகட்டத்தில் இக்குழி கட்டப்பட்டு இருக்கிறது என்றும் புரிந்து கொள்ளும் வல்லுநர்களால்,இக்குழி எதற்காக கட்டப்பட்டு உள்ளது என்பதை அறிய முடியவில்லை.இதனை Bank Of Holes என்றும் அழைப்பார்கள்.

Shell Grotto (ஷெல்-கடற் சங்குகள்):

ஷெல் கிரோட்டோ என்பது ஒரு அலங்கரிக்கப்பட்ட பாதையாகும்,இது Margate, Kent-ல் உள்ளது. ஷெல் கோட்டை பூமிக்கு அடியில் கட்டப்பட்டு இருக்கும் கோட்டை ஆகும். சுவர்கள் மற்றும் கூரையின் அனைத்து மேற்பரப்புகளும் கிட்டத்தட்ட சீசஷ்களால் உருவாக்கப்பட்டவை 2,000 சதுர அடி 190 மீ 2 மொசைக் (அல்லது) 4.6 மில்லியன் ஷெல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. இது 1835 இல் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இதன் வயது (மற்றும்) நோக்கம் இன்றளவும் அறியப்படவில்லை.3000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

Tell Al-Ubaid:

ஈராக்கில் உள்ள தி கியர் என்ற இடத்தில 1919 ஆண்டு அகழ்வாராயிச்சி செய்யும் போது ஒரு கட்டிடத்தை கண்டு அறிந்தனர்,அங்கு ஆண் மற்றும் பெண் சிலைகள் கிடைத்தன,மேலும் இவர்களின் தலை பல்லியின் வடிவத்தை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.பாதம் கொட்டை வடிவ கண்களுடனும்,தலை கவசம் அணிந்தும்,தோளில் பட்டையுடனும் இருக்கிறதாம்.பல ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதர்கள் இப்படித்தான் இருந்து இருக்க கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Atacama Skeleton:

அட்டகாமா பாலைவனத்தில் இருந்து ஒரு எலும்புக்கூட்டை “alien” என்று எண்ணி வைத்து இருந்தார்கள்.ஆனால் மரபணு சோதனையில் அது ஒரு பெண் என்றும் அறியப்படாத எலும்புக் கோளாறு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.இதனை Atacama Skeleton என்றும் அழைப்பார்கள்,மேலும் 2003-இல் கண்டுபிடிக்கப்பட்டது.

The Devil’s Bible:

The Devil’s Bible 36 அங்குல உயரம், 20 அங்குல அகலம், 8.7 அங்குல தடிமன் கொண்டது.இப்புத்தகத்தை முடிக்க முப்பது ஆண்டுகள் வரை அது எடுக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இது 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது.பேய்களின் முழு உருவங்களை கொண்டுள்ளமையால் இதனை டெவில்ஸ் பைபிள் என்று அழைக்கிறார்கள்.

Beauty Lies in the Heart ♡

உள்ளத்தை மட்டும் பாருங்கள்.

ஒரு முறை நான் அமெரிக்கா செல்லும்பொது ஜன்னல் சீட் அருகில்அமர்ந்திருந்தேன் அப்போது ஒரு பெரிய உருவம் என் அருகில் வந்துஅமர்ந்தது. என்னுடைய சீட்டின் முக்கால்வாசி இடத்தை அடைத்து கொண்டு உட்கார்ந்திருந்தார்.நான் வேறு வழி இல்லாமல் ஜன்னல் ஓரம் ஒண்டிக்கொண்டேன்.அந்த பெண்மனி என்னை பார்த்து ஹாய் என்றார், நானும் வேண்டாவெறுப்பாக ஹாய்என்றேன்.இந்த அம்மாவோட எப்படி தான் உட்கார்ந்து போவதோ என்று எண்ணியபடி ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

ஒரு பெரிய கை என் முகத்துக்கு நேராக நீட்டியது என் பெயர் லாரா என்றாள் நான் அமேரிக்கா நீங்களும் அமேரிக்காவா என்றாள்.இல்லை மலேசியா என்றேன் சலிப்போடு.ஓ சாரி நீங்க அமெரிக்கான்னு நினைச்சேன் ,இன்னும் 6 மணி நேரம்
ஒன்றாக பிரயானம் பண்ணப்போகிறோம் கை கொடுங்க ஜாலியா பேசிட்டே போகலாம் என்றாள்.நானும் வேறி வழி இல்லாமல் கையை நீட்டினேன்.

அந்த அம்மா அவர்களை பத்தி பேச ஆரம்பித்தார்கள் தான் ஒரு டீச்சர் என்றும் தன் மாணவர்களுக்கு நிறைய பொருட்கள் வாங்கி கொண்டு போவதாகவும் தன் குடும்பத்தார் தனக்காக ஏர்போர்டில் காத்து கொண்டு இருப்பார்கள் என்றும் சொல்லிகொண்டே வந்தாள் .நான் எல்லாவற்றிற்கும் ஒரு வரியில் பதில் சொல்லி கொண்டு வந்தேன்.அவர் பேசும்போது நன்கு படித்தவர் என்பதும் சைக்காலஜி நன்கு தெரிந்தவர்என்பதும் அவர் மேல் எனக்கு மரியாதை ஏற்படுத்தியது.

பணிப்பெண் எங்களுக்கு உணவு கொண்டு வந்தார்.இருவரும் எடுத்து கொண்டோம்.பணிப்பெண்னிடம் உங்கள் இந்த சேவைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்க்ள் என்றார்.பணிப்பெண் சிரித்துக்கொண்டே போனார்.யானை மாதிரி இடத்தை அடைத்து கொண்டு உட்கார்ந்து இருக்கேன் நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொள்கிறேன் நீங்கள் ப்ரீயா சாப்பிடுங்கள் என்றார்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி அந்த பெண் மேல் எரிச்சலடைந்த நான் இப்போது அவர் பேசபேச சிரித்து ரசித்து கேட்டு கொண்டு வருகிறேன்.அந்த அம்மா பேசுவதை எல்லாரும் ரசித்து கேட்டு கொண்டு வந்தனர்.ஆரம்பத்தில் அவர் உருவத்தை பார்த்து கேலி செய்தவர்கள் இப்போது அவருடன் ஆவலாக பேசிக்கொண்டும் சிரித்து கொண்டும் வந்தார்கள்.அந்த விமானத்திலேயே அவர் தான் Centre of attraction .

நீங்கள் உங்கள் உடம்பை குறைக்க எதாவது முயற்சி எடுத்தீர்களா என்று கேட்டேன்.இல்லையே நான் ஏன் என் உடம்பை குறைக்கனும்.குண்டாக இருந்தால் இதய நோய் வரும் அதுனாலத்தான் சொன்னேன் என்றேன்.கண்டிப்பாக கிடையாது ,முழு நேரமும் எடையை பற்றி கவலைப்பட்டுக் கொண்டு இருக்கின்ற உங்களை மாதிரி ஆட்களுக்கு தான் இதய நோய் வரும்.விளம்பரங்களில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்’ உங்கள் உடல் குண்டாகஇருக்கிறது என்று தாழ்வு மனப்பான்மையா எங்களிடம் வாருங்கள் ‘என்று விளம்பரப்படுத்துவார்கள்.

நான் பிறக்கும்போதே குண்டாக பிறந்தேன் ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறேன் நன்றாக நடக்கிறேன்.எனக்கு எந்த கவலையும் கிடையாது.எனக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும்போது உடல் இடையை குறைக்க நான் ஏன் என் நேரத்தை வீணடிக்க வேண்டும்.மற்றவர்கள் தான் என்னை பார்க்கும்போது குண்டு என்றும் சோம்பேறியாக

இருப்பாள் என்றும் நினைக்கிறார்கள்.நான் உடல் அளவில் தான் பெரியவள் ஆனால் மனதளவில் நான் குழந்தை.உங்களைவிட எனக்கு மனதளவில் தைரியம் ஜாஸ்தி.உங்கள் பின்னாடி ஆண்கள் துரத்தி இருக்கிறார்களா என்று விளையாட்டாக கேட்டேன்.ஆமாம் துரத்தி இருக்கிறார்கள் என்றார்.நிறைய ஆண்கள் உருவத்தை பார்ப்பதில்லை மனதை மட்டுமே பார்ப்பவர்கள்.எனக்கு திருமணம் ஆகிவிட்டது இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர் என்றார்.நான் டீச்சராக இல்லாமல் இருந்தால் பெரிய ஆலோசகராக மாறி இருப்பேன்.நிறைய ஆண்கள் என்னிடம் வந்து ஆலோசனை கேட்பார்கள்.

கடவுள் எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார் அதை என் பெரிய உருவத்தில் வைத்து மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்.என் எடையை குறைத்து என் சந்தோஷத்தை நான் இழக்க விரும்பவில்லை.நிறைய பெண்கள் திருமணத்திற்கு பிறகு குண்டாகி விடுகிறார்கள் அதற்காக அவர்கள் கணவர்கள் அவர்களை வெறுப்பதில்லை.

லாரா பேச்சை கேட்டு விமானத்தில் இருந்த அனைவரும் கை தட்டினர்.விமானம் தரை இறங்கியதும் லாராவை அழைத்து செல்ல பெரிய உருவம் கொண்ட அவர் உறவினர்கள் வந்திருந்தனர்.பயணம் செய்த அனைவரும் லாராவுக்கு டாட்டா காட்டி வழி அனுப்பி வைத்தனர்.லாரா போகும்போது என்னை பார்த்து கண்ணடித்துவிட்டு சென்றாள்.

நான் பார்த்த பெண்களிலே இவளை போன்று ஒரு அழகியை பர்த்தது இல்லை என்று என் மனம் சொல்லியது.நண்பர்களே மனிதர்களின் உடலை பார்க்காதீர்கள் உள்ளத்தை மட்டும் பாருங்கள். உடல் பருமன் ஒரு குறை அல்ல.நல்ல பதிவுகளை அதிகமாக பகிருங்கள்…இந்த பதிவு குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி… மேலும் இது போன்ற சுவாரிஸ்யமான பதிவுகளை படிக்க தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி. .

Modern Draupadi

நமக்கு தெரிந்த இந்திய வரலாற்றுக் கதைகளில் ஒரு பெண்ணிற்கு 5 கணவர்கள் இருந்தது மகாபாரதத்தில் மட்டும் தான், ஆனால் அப்படி ஒன்று இப்போது சாத்தியமா என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.ஆனால் அப்படி ஒருவர் இருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.

அந்தப் பெண்ணின் பெயர் ரோஜா, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து சகோ தரர்களை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.டேராடூன்-ல் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் இவர்,மேலும் தான் இந்த 5 சகோதரர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார்.

இவர்களது குடும்பத்தை பொறுத்தவரை இம்மாதிரி திருமணம் செய்து கொள்வது பாரம்பரியம் என்று கூறும் இவர்கள், இதனை எதிர்காலத்திலும் நாங்கள் தொடருவோம் என்று2 கூறுகிறார்கள்.

அந்த கிராமத்தில் பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என்ற காரணத்தினால் சகோதரத்து பலதார திருமணம் வழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ரோஜாவிற்கு ஒரு குழந்தை உள்ளது,இக்குழந்தை ஐந்து சகோதரர்களில் எந்த சகோதரருக்கு பிறந்தார் என்பதே அவர்களுக்கு தெரியாதாம்.ரோஜா முதன் முதலில் குட்டு வர்மா என்றவரை மணம் முடித்தார்.பின் அவரது தம்பி மற்றும் பெரிய அண்ணன் பஜ்ஜூ வர்மாவையும்,அதன் பிறகு சாந்த் வர்மாவையும், பின் கோபால் வர்மாவையும் மற்றும் தினேஷ் வர்மாவையும் ஒன்றன் பின் ஒன்றாக மணம் முடித்தார்.

ரோஜாவை போலவே அவரது தாயாரும் ஒரே குடும்பத்தில் பிறந்த மூன்று சகோதரர்களை திருமணம் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

How to Control Anger?

கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட,சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும்.உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்,

1. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.

2. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.

3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்

4. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.

5. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.

6. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.

7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.

8. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.

9. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.

10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.

11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.

12. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

13. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

ஒரு நொடி கோபப்பட்டால் 60 விநாடிகள் சந்தோஷத்தை இழக்கிறோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எனவே, பிறரின் மேல் நம்பிக்கை வைத்து கோபத்தை வெற்றி கொள்ளுங்கள்.பிறருடன் நட்பாய் இருங்கள்.

மகிழ்ச்சியாய் இருங்கள்!

Logos with Hidden Meanings

பிரபல முத்திரைகளும் அதில் மறைந்து இருக்கும் அர்த்தங்களும்!
பல நிறுவனங்களின் முத்திரைகளை நாம் தினமும் காண்கிறோம்,ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.அப்படி நம்மில் பலருக்கு தெரியாத 5 நிறுவத்தின் முத்திரை அர்த்தங்களை என்ன என்னவென்று பார்க்கலாம்..

1.) HYUNDAI

நிறைய பேர் hyundai முத்திரையை அந்த நிறுவனத்தின் முதல் எழுத்தாகிய “H”-ஐ குறிக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் உண்மை அது அல்ல,இரண்டு நபர்கள் கை குலுக்கும் படி அந்த முத்திரை அமைக்கப்பட்டு இருக்கும்.முத்திரையில் உள்ள ஒரு மனித உருவம் வாடிக்கையாளரையும்,மற்றொரு உருவம் விற்பனையாளரையும் குறிக்கும்.

2.) ADIDAS

Adolf Dassler என்பவரின் பெயரில் இருந்து ADIDAS என்ற பெயர் திரிந்து இருக்கிறது.மேலும் Adolf Dassler தான் இந்த நிறுவனத்தை தொடங்கியவர். Adidas நிறுவனத்தின் முத்திரை காலத்திற்கேற்ப மாறினாலும்,அதில் இருக்கும் மூன்று கோடுகள் மட்டும் மாறவில்லை.

3.) APPLE

நாம் அனைவரும் அறிந்த,பிரபலமான ஆப்பிள் நிறுவத்தின் முத்திரையை உருவாக்கியவர் ஒரு பேட்டியில் கூறியதாவது “ஆப்பிள் நிறுவனத்திற்க்கு முத்திரை செய்ய பல விதமான ஆப்பிள்களை வித விதமான கோணங்களில் வைத்துப் பார்த்தேன், எதுவும் சரிப்படவில்லை, சிறிது நேரம் கழித்து ஒரு கடி கடித்து விட்டு பார்த்த போது, தனக்கு தேவையான எதார்த்தமான முத்திரை கிடைத்ததாக நம்பினேன்,அதை செயல்படுத்தினேன்” என்று கூறினார்.

4.) BMW

விமானத்தில் சுற்றும் விசிறிகளை மைய்யமாக வைத்து அமைக்கப் பட்டு இருக்கும் முத்திரையே இது.மேலும் BMW நிறுவனத்தின் வரலாற்றை உணர்த்தும் வகையிலும் இதன் முத்திரை அமைக்கப் பட்டு இருக்கும்.

5.) EVERNOTE

யானைகளுக்கு முகங்களை ஓரு முறை பார்த்து விட்டால் அவர்களை அறிந்துக்கொள்ளும்,மேலும் யானைகளுக்கு நல்ல நியாபக சக்தி உண்டு,எனவே தான் Evernote நிறுவனம் யானையின் உருவத்தை முத்திரையாக வைத்து உள்ளது.(Evernote – குறிப்பு எடுக்கும் மென் பொருள்)

Daasi and Sanyasi – Spiritual Story

ஒரு தாசியின் வீடும், சந்நியாசியின் குடிலும் அருகருகே இருந்தன.தாசியின் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து போவதை சந்நியாசி கவனித்தார்,ஒருநாள் அவளைஅழைத்து,“கொடிய தொழில் செய்யும் நீ, பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாய்.இறை வழிபாட்டுக்காக என் குடிலுக்கு வந்து போகும் பக்தர்களுக்கு, உன் தொழில் இடையூறாக இருக்கிறது. நீ இதை விட்டுவிடு! வேறு ஏதேனும் தொழில் செய்,”-என்று அறிவுரை சொன்னார்.

அவள் அதைக்கேட்டு நடுங்கினாள்.
“சுவாமி! எனக்கு மட்டும் வேறு தொழில் செய்யும் ஆசை இல்லையா? பாவப்புதையலுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு, வேறு வேலை தர எல்லாரும் மறுக்கிறார்களே! ஒழுக்கம் கெட்டவளை வீட்டு வேலைக்கு சேர்த்தால் என் கணவனுக்கும், வாழ்க்கைக்கும் அல்லவா ஆபத்து- என்று குடும்பப்பெண்கள் என்னைக் கடிகிறார்களே!
நான் என்ன செய்வேன், இருப்பினும், இதை விட்டுவிட முயற்சிக்கிறேன்,” என்றாள்.

பட்டினி கிடந்தேனும் செத்து விட முடிவெடுத்தாள்.
ஒவ்வொரு நாளும் தான் செய்த பாவத்தொழிலுக்கான மன்னிப்பு வேண்டி இறைவனிடம் ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்தாள்.ஆனால், பாழும் சமுதாயம் அவளை விடவில்லை.
“உன் பரம்பரையே இந்தத்தொழில் செய்து தானே பிழைத்தது. நீயும் கெட்டுப்போனவள் தானே!
இப்போது பத்தினி போல் நடிக்கிறாயா?” என்று கேவலமாகப் பேசியதுடன், அவளை வலுக்கட்டாயமாகவும் இழுத்துச் சென்றனர் சில மாபாதகர்கள்.

வேறு வழியின்றி அதையே அவள் தொடர்ந்தாள்.
இறைவனிடம் தன் நிலையைச் சொல்லி அழுதாள்.
அவளது மனமாற்றத்தை அறியாத சந்நியாசி, தான் சொல்லியும் அந்தப்பெண் கேட்கவில்லையே என கோபமடைந்தார்.ஒவ்வொரு நாளும் அவளது வீட்டுக்கு வந்து போகும் ஆண்களின் எண்ணிக்கை அளவுக்கு கூழாங்கற்களை எடுத்து ஓரிடத்தில் போட்டார். அந்தக்குவியல் தினமும் உயர்ந்து கொண்டே வந்தது.

ஒருநாள் அவளிடம் அந்தக்குவியலைக் காட்டி,
“நீ செய்த பாவத்தின் அளவைப் பார்த்தாயா! சொல்லச்சொல்ல கேட்க மறுக்கிறாயே!” என்று கடிந்து கொண்டார்.அந்தக்குவியலைக் கண்டு மலைத்த அந்த அப்பாவி பெண் இறைவனிடம்,
“கடவுளே! இனியும் இந்தத்தொழில் எனக்கு வேண்டாம். தற்கொலை செய்வது பாவம் என்கிறார்கள். இல்லாவிட்டால், அதை செய்திருப்பேன். நீயாக என் உயிரை எடுத்துக் கொள்,”என்று கதறியழுது பிரார்த்தித்தாள். அவளது கோரிக்கையை இறைவன் ஏற்றான்.

அன்றிரவே அவளது உயிர் போனது.
சந்நியாசியும் அதே நாளில் இறந்தார்.
தாசியின் உடலை ஊர் எல்லையில் இருந்த காட்டுக்குள் வீசி விட்டனர் அருகில் இருந்தவர்கள்.
நரிகளுக்கும், நாய்களுக்கும் அவளது உடல் விருந்தானது.

சந்நியாசியை மலர்களால் அலங்கரித்து, மலர் பல்லக்கில் ஏற்றி முறைப்படி அடக்கம் செய்தனர்.
அந்த ஆத்மாக்கள் விண்ணுலகம் சென்றன.
அங்கிருந்தவர்கள் எமதூதர்களை அழைத்து, தாசியை சொர்க்கத்துக்கும், சந்நியாசியை நரகத்துக்கும் அனுப்பக்கூறினர்.
சந்நியாசி கதறினார். “”பாவிக்கு சொர்க்கம், எனக்கு நரகமா?” என்றார்.

“”துறவியே! அவள் உடலால் தவறு செய்தாள்.
மனதால் இறைவனைப் பிரார்த்தித்தாள்.
அதனால் அவளது உடல் பூலோகத்தில் மிருகங்களுக்கு இரையானது. நீர் பூலோகத்தில் உடலால் தவறு செய்யாததால், உம் உடலுக்கு அங்கே மரியாதை கிடைத்தது. ஆனால், மனதால் தாசியின் பாவச்செயலை மட்டுமே சிந்தித்தீர்.

அதனால், இறைவழிபாட்டில் முழுமையாகக் கவனம் செலுத்தவில்லை. எனவே உமக்கு நரகம்,” என்றனர்.
இறைவனுக்கு உடலை விட மனமே முக்கியம் என்பது தெளிவாகிறதல்லவா.

Menstruation Explained

மாத விலக்கு – Menstruation என்பதை பற்றி இன்றும் பல ஆண்களுக்கு தெளிவாக தெரியாது, ஏன் திருமணம் ஆகிய ஆண்களுக்கு கூட இது பற்றி தெரியாது.. இம்மாதிரியான விஷயங்களை மறைத்து மறைத்து வைத்து இருப்பதால் தான் பெண்கள் பற்றி சரியான புரிதல் இல்லாமல் போகிறது,இதனாலே பல இன்னல்களுக்கும்,வன்முறைக்கும் ஆளாகிறார்கள்.எனவே இதைப்பற்றி பேச வேண்டும் இதைப்பற்றி பேசக்கூடாது என்று இல்லாமல் அனைத்தை பற்றியும் நாம் பேசி,தெரிந்துக்கொள்ள வேண்டும்.

சரி விஷயத்திற்கு வருவோம்… “மாத விலக்கு என்றால் என்ன?”
ஒவ்வொரு வயது வந்த பெண்ணிற்கும் 28 நாட்களுக்கு ஒரு முறை,பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தம் வெளியேருவதையே நாம் மாதவிலக்கு என்று சொல்கிறோம்.

“சரி இது ஏன் பெண்களுக்கு வருகிறது?”
பெண்களுக்கு இயற்கையாகவே அவர்களது உடம்பில் முட்டை உருவாகும்,அப்போது உடலுறவில் ஈடுபட்டால் ஆணின் விந்து முட்டையில் கலந்து கருத்தரிப்பு உண்டாகும்,பின் 10 மாத இடைவெளியில் குழந்தை பிறக்கும்.

பெண்கள் உறவு கொள்ளாத காலங்களில் கூட அவர்களது உடலில் முட்டை உருவாகும்,அப்போது உறவு கொள்ளவில்லை என்றால் அந்த முட்டை உடம்பில் தங்காமல் பெண்ணின் பிறப்பு உறுப்பு வழியாக ரத்தமாக வெளியேறும், 28 நாட்களுக்கு ஒரு முறை முட்டை உருவாகி,வெளியேற்றப்படும்.சில பெண்களுக்கு 5 நாட்கள்,3நாட்கள், ஏன் 7 நாட்கள் வரை கூட இந்த மாத விலக்கு நீடிக்கும்.

“மாத விலக்கின் போது பெண்கள் ஏன் கோவில்களுக்கு செல்ல கூடாது?”
பொதுவாகவே கோவில் என்பது நேர்மறை சக்திகளை உடையது, மாத விலக்கின் போது பெண்களுக்கு பிறப்பு உறுப்பின் வழியே எதிர்மறை சக்திகளாய் ரத்தம் வெளியேறும்,அப்போது கோவிலுக்கு சென்றால் அவர்களுக்கு வெளியேறும் அந்த ரத்தம் வெளிவராமல் இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது எனவே தான் கோவில்களுக்கு செல்லக்கூடாது என்று கூறுகிறார்கள்.

“மாத விலக்கின் போது பெண்கள் ஏன் சமைக்க கூடாது,வீட்டு வேலை செய்யக்கூடாது,தனியாக இருக்க வேண்டும்,வீட்டினை விட்டு வெளியே வரக்கூடாது என்றால்??”
மாதம் 28 நாட்கள் வீட்டில் சமைப்பது, துவைப்பது, கடைக்கு செல்வது, பெருக்குவது, வீட்டை சுத்தமாக வைப்பது என பெண்களின் வீட்டு வேலையே தலைக்கு மேல் இருக்கும்,அப்படி தொடர்ந்து வேலை செய்யும் பெண்களுக்கு கண்டிப்பாக ஓய்வு தேவை எனவே மாதவிலக்கு வரும் காலங்களில் பெண்கள் சற்று நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம்,அந்த சமயங்களில் கணவன் மனைவிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

ஆதி காலத்தில் இந்தியா மலைகளும்,காடுகளும் நிறைந்த நாடாகவே இருந்தது அப்போது பெண்கள் வெளியே சென்றால் அவர்களது உடலில் இருந்து வெளியேறும் ரத்தம் மிருகங்ககளை எளிதாக ஈர்க்கும், இப்படி ஆனால் மிருகங்களுக்கு பலி ஆக வேண்டியது தான்,எனவே தான் பெண்களை மாத விலக்கின் போது வெளியே செல்லக்கூடாது என்று அந்த காலத்தில் கூறினார்கள்.

மேலும் மாத விலக்கு – Menstruation ஏற்படும் காலங்களில் தீராத வயிற்று வலி,தலை வலி என பெண்கள் ஆளாவார்கள்.இன்றும் பல நாடுகளில் மாத விகக்கு விடுமுறை என்பது பெண்களுக்கு உள்ளது.எனவே பெண்களின் கஷ்டத்தை புரிந்துகொண்டு அவர்களை போற்றவில்லை என்றாலும் நிம்மதியாக வாழவாவது விட வேண்டும்.

Astrology Predictions

இந்த ராசி பெண்களை மட்டும் தவற விட்டுறாதீங்க!

மேஷ ராசி: மேஷ ராசி பெண்கள் மிகவும் வெளிப்படையாக இருப்பார்கள்,அவர்கள் கிரியேட்டிவ் ஆன சிந்தனை தோன்றும் இவர்கள் பொய் சொல்லவோ பொய்யாக நடிக்க மாட்டார்கள்,ஒருவரை விரும்புவது என்பது கடினமான ஒன்று, ஆனால் மனப்பூர்வமாக ஒருவரை விரும்பி விட்டால் புதுமையின் உச்சத்திற்கு சென்று தனது காதலை அனுபவிப்பார்கள்,எனவே நீங்கள் இவர்களுடன் இருந்தால் போர் அடிக்காது.

ரிஷப ராசி: இவர்களுக்கு இயற்கைலயெய் கொஞ்சம் திமிரு இருக்கும், ஆனால் உங்களிடம் மனம் திறந்து பேச ஆரம்பித்து விட்டாள் அவர்களுகுளையெய் அவளோ நல்லவர் என்று உங்களுக்கு தெரியும்,
சுப காரியம் அனுகூலம் உண்டாகும்.உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும், கொடுக்கள், வாங்கள் கவனம் தேவை. உதவி செய்யும் குணம் கொண்டவராக இருப்பார்.

மிதுன ராசி: மிதுன ராசி பெண்கள் இவர்களுக்கு இரண்டு முகங்கள் உண்டு,மனநிலை பொறுத்து ஒவோரு விதமாக நடந்து கொள்வார்கள், உங்கள் செல்வாக்கு உயரும் வகையில் இந்த செயல்பாடு இருக்கும். இந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.பாசமும்,கருணை உள்ளமும் கொண்ட மகர ராசி பெண்கள் ஆண்களை எளிதில் ஈர்த்துவிடுவார்கள். இவர்கள் உண்மையான முகம் விரைவிலேயே வெளிப்பட்டு விடும்.உங்களுக்கு உதவி செய்ய விரும்புவார்கள்.

கடக ராசி: கடக ராசி பெண்கள் ரொமான்டிக் காக இருப்பார்கள் இவர்கள் மீது யார் பாசமாக இருக்கிறார்களோ, நல்ல பார்த்து கொள்கிறார்களோ கடக ராசி பெண்கள் எளிதில் காதலில் விழுந்து விடுவார்கள். இவர்கள் ஒருவரை விரும்புவது என்பது கடினமான ஒன்று, ஆனால் மனப்பூர்வமாக ஒருவரை விரும்பி விட்டால் புதுமையின் உச்சத்திற்கு சென்று தனது காதலை அனுபவிப்பார்கள்,சிறந்த அறிவாற்றலும்,தனித்தன்மையும் அதிகம் பெற்று இருப்பார்கள்.இவர்கள் எளிதில் ஆண்களை கவர்வார்கள்.இவர்கள் மிகவும் கவர்சசிகரமான ஆனவர்கள்.யாரையும் எளிதில் நம்பி விடுவார்கள்.

சிம்ம ராசி: சிம்ம ராசி பெண்கள் இயற்கையாகவே தலைமை பண்பு இருக்கு. உங்களுக்கு எதேனும் கஷ்டம் என்றால் இவர்கள் தோலில் சாய்ந்து விடலாம், இவர்களிடம் நீங்கள் எதையும் பகிர்ந்து கொள்ள முடியும் நீங்கள் பொய் சொல்வதா இருந்தால் சிறிய பொய் மட்டும் சொல்லுங்கள். யென் என்றால் இவர்கள் மென்மையான குணம் கொண்டவராக இருப்பார்கள்.

கன்னி ராசி: கன்னி ராசி பெண்கள் அறிவுரை சொல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள், இவர்களுக்கு தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும், நீங்கள் தான் அவரை பெருமையாக உணர வைக்க முடியும்.அவர்கள் உண்மையாகவே பெருமை கூரியவர்களால் இருப்பார்கள், அவர்கள் மீது அன்பு வைப்பார்கள், அச்சிரியம் தருபவர்கள் இருப்பார்கள் இவர்கள் உண்மையாக காதலிபார்கள்.

Veerappan: The Untold Story!

வீரப்பன் – Veerappan என்ற பெயரை சொன்னாலே பல பேருக்கு ஈரக்கொலை நடுங்கும், அப்படிப்பட்ட வீரப்பன் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? தெரிந்துகொள்ளலாமா?

வீரப்பன் வரலாறு – Veerappan History :

1952ஆண்டு ஜனவரி மாதம்,கோபிநத்தம் என்ற ஊரில் பிறந்தார்,முத்து லட்சுமி என்ற அம்மையாரை திருமணம் செய்தார் வீரப்பன்,இவர்களுக்கு 2 பிள்ளைகளும் பிறந்தார்கள், இது சொந்த வாழ்க்கை. 1962 ஆம் ஆண்டு தன் 10 வயதில் யானை ஒன்றை வேட்டையாடி, மேலும் 3 வனத்துறை அதிகாரிகளை கொன்றார் வீரப்பன்,இதுவே அவரது முதல் குற்றமாகும்.

தன் ஊரில் பெரியவர் ஒருவரோடு சேர்ந்து சந்தன மரத்தை வெட்டி அதனை கடத்தி பணம் ஈட்டினார். இப்படி சந்தன கடத்தலில் 4 வகையான கூட்டம் இருந்தது, அதில் விரப்பனும் தனக்கென்று தனி கூட்டத்தை சேர்த்ததார். சந்தன மரங்களை வெட்டுவது அரசுக்கு எதிரானது என்பதால் வனத்துறை அதிகாரிகளுக்கும்,காவல்துறைக்கும் நெருக்கடி அதிகம் ஆகியது.

அப்போது, காவல் துறை வீரப்பனை அழைத்து நீ மற்ற கூட்டத்தின் தலைவர்களை கொன்று விட்டு, தனியாக இத்தொழிலை செய், எங்களுக்கும் கெடு பிடி அதிகம் ஆகிவிட்டது என்று கூற மீதி இருப்பவர்களை வெட்டி காவேரி ஆற்றில் வீசுகிறார் வீரப்பன்.இப்பொழுது சந்தன கடத்தல் தொழிலில் மீதம் இருப்பது வீரப்பன் மட்டும் தான்,ஆனால் காவல் துறை அவரை கைது செய்கிறது..கைது செய்து சிறையிலும் அடைக்கிறது.

சிறையில் இருந்த காலகட்டத்தில், அவரை காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து கொல்லப் போவதாக ஒரு காவல் துறை அதிகாரியின் மூலமாக வீரப்பனின் காதுகளில் விழ,அவர் அந்தச் சிறையை விட்டு தப்பித்தார்..காவல் துறை நமக்கு தோரோகம் இழைத்து விட்டது என்று எண்ணிய வீரப்பன் இங்கு தான் கோபம் அடைகிறார்..பின் வீரப்பன் காடு என்ற காட்டில் தன் கோட்டையை நிறுவினார் வீரப்பன், 14000 sq.km பரப்பளவை கொண்டது இக்காடு.

இப்போது காவல்துறை அதிகாரிகளை பழி தீர்க்கவும் ஆரம்பித்தார்,1990-களில் கர்நாடகவை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்ற உயர் காவல் துறை அதிகாரியை கொன்று, அவர் தலையை கழுதையின் மேல் வைத்து அனுப்பினார் வீரப்பன்.. இப்படி தொடர்ந்து காவல் துறை மீது 3 கொலைகள் நடக்க, கர்நாடக மாநிலம் வீரப்பனை பிடிக்க ஹரி கிரிஷ்ணா என்ற SP தலைமையில் காவல் படையை காட்டிற்குள் அனுப்புகிறது.இது செய்தியாக கூட வந்தது.

சில நாட்களில் 40 பேரை வீரப்பன் கொன்றதாக செய்தி பத்திரிகை ஒன்றுக்கு வர காவல் துறையில் 6 பேர்  மட்டுமே இறந்ததாக தகவல் வந்தது. SP, Inspector போன்ற 6 பேர் மட்டுமே இறந்ததாக காவல் துறை கூறியது..அந்த காலத்தில் வீரப்பன் முகத்தில் மீசை இருக்காது.

90-களில் வீரப்பன் அவர்களை பிடித்து தந்தால் 40 லட்சம் பரிசு தொகை அறிவிக்க பட்டு இருந்தது.93-களில் Bomb Blast ஒன்று பாலாற்றில் நடந்தது.இதில் 22 காவல் அதிகாரிகள் இறந்தனர்கள்.

இதன் பின்பு தான் பிரபல பத்திரிகை ஒன்று வீரப்பனை பேட்டி எடுத்து அவரின் புகைப்படங்களை வைத்து இருந்தது,முதல் முதலில் வீரப்பன் மீசையுடன் காட்சியளித்தது அந்த புகைப்படங்களில் தான்.

இந்த பாலாறு Bomb Blast சம்பவத்திற்கு பிறகு அந்த பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்களுக்கு காவல் துறை அதிகாரிகள் பாலியல் தொல்லைகள் மற்றும் பல இன்னல்களை கொடுத்து உள்ளார்கள் எனவும் பத்திரிகை ஒன்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

93-களில் வீரப்பனின் கடத்தல்கள் அதிகம் ஆக, பத்திரிகைகள் உண்மை செய்தியை கொண்டு வர, காவல் துறை அதிகாரிகள் தவறான செய்திகளை மட்டுமே பரப்பி வந்தாக தகவல்.

இம்மாதிரியான கொடுமைகள் தன்னால் மக்கள் அனுபவிக்கிறார்கள் என தெரிந்த பின்,130 கொலைகள் செய்த வீரப்பன் தான் சரண் அடைகிறேன் என்று கூற பத்திரிகை ஆசிரியர் ஒருவர் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிடையே தூதுவராக செல்கிறார்..அப்படி செல்லும் முன் விரப்பனிடம் ஒரு கோரிக்கையும் வைக்கிறார். நீங்கள் இன்று முதல் யாரையும் கொலை செய்யக்கூடாது, கடத்த கூடாது, அப்படி என்றால் உங்கள் சரண்டர் பற்றி நான் பேசுகிறேன் என்று கூறுகிறார்.

பத்திரிகை ஆசிரியர் கூறிய படி 2 வருடங்கள் வீரப்பன் எந்த வித தீய வழிகளிலும் ஈடுபடவில்லை. இதனிடையே காவல் துறை இவர் எந்த தவறும் செய்யாமல் இருப்பதை பார்த்து வீரப்பனை கொல்ல சரியான தருணம் இது தான் என்று களத்தில் இறங்க,வேறு வழி இல்லாமல் 1997-ல் மீண்டும் 9 காவலர்களை கடத்துகிறார்.

இதன் பின் அன்று இருந்த இரண்டு மாநில முதல்வர்களும் ஒன்று சேர்ந்து நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களை அரசு தூதுவராக அனுப்புகிறார்கள்.

இத்தியாவிலேயே இப்படிப்பட்ட சம்பவம் இன்று வரை நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.பின் 2000த்தில் கர்நாடகா சூப்பர் ஸ்டார் ராஜ் குமார் அவர்களை கடத்தினார் வீரப்பன்..108 நாட்களுக்கு பிறகே ராஜ் குமார் வெளியே வந்தார்.

2004 ஆம் ஆண்டு விஜய குமார் தலைமையில் ஒரு குழு சென்று, வீரப்பனை கொன்றதாக ஒரு தகவலும்..விஷம் வைத்து தான் வீரப்பன் கொல்லப்பட்டார் எனவும் இரண்டு விதமான தகவல்கள் உள்ளது. இதில் எது உண்மை என்று இன்று வரை தெரியவில்லை.

ஆனால் காவல்துறையின் தகவல்களின் படி வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டார் என்பதே ஆகும்.

வீரப்பனின் சுவாரஸ்யமான கதைகள் – Interesting Stories of Veerappan:

வீரப்பனின் சில சுவாரஸ்யமான தகவல்கள் சில, அதனை மேலும் அறிய கீழ் வரும் உண்மை கதையை படியுங்கள், கோயம்புத்தூரில் 1997-ல் விழா ஒன்று நடந்தது அதில் வீரப்பனை பிடிக்க முயன்ற உயர் அதிகாரி ஒருவர் மேடையில் சொன்ன தகவல் இது, 1990-களில் காவல் துறை அதிகாரிகள் சந்தன கட்டைகளை மீட்க ஒரு ஏற்பாடு செய்தார்கள்.

அந்த ஏற்பாட்டிற்கு முன் தமிழ் நாட்டை சேர்ந்த 6 உயர் காவல் துறை அதிகாரிகள் மட்டும்,வட்டாமாக அமர்ந்து பேசினோம் அதில் நானும் ஒருவன்.

என்ன பேசினோம் என்றால் நாம் கைப்பற்றப் போகும் சந்தன கட்டைகளை நாம் மட்டும் பிடித்ததாக தமிழக அரசாங்கத்திற்கு கணக்கு காட்ட வேண்டாம், கர்நாடக அரசு போலீசாரும் இதை பறிமுதல் செய்ததாக அரசாங்கதிடம் கணக்குகளை காட்டலாம், எனவே நம்ம 50 அவங்க 50 ..50-50 என்ற கணக்கே அரசாங்கத்திற்கு காட்டுவோம் என தங்களது பேச்சை முடித்துக் கொண்டு,2 வாகனங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் காவல்துறை அதிகாரிகளையும் அனுப்பினார்கள் அந்த 6 பேரும், சென்ற வாகனம் 3 நாட்கள் ஆகியும் திரும்ப வில்லை.என்னடா இது இன்னும் வர வில்லை என என்னிய அதிகாரி, நேரில் சென்று பார்க்க புறப்பட்டார்..(மேடையில் பேசுபவரே அங்கு சென்றது)

அங்கு சென்று பார்த்தால், வாகனம் இரண்டும் எரிந்து கிடந்தது,காவல் துறை அதிகாரிகள் மரத்தில் கட்டிவைக்க பட்டு இருந்தார்கள்..தண்ணீரை முகத்தில் தெளித்து அவர்களை தெளிய வைத்தபின் அவர்கள் கூறியது என்ன தெரியுமா? நாங்கள் இங்கே வந்து சந்தன கட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தோம், அப்போது பெரிய மீசை வைத்த ஒருவர் 150 பேருடன் வந்தார்,எங்களை மரத்தில் கட்டி வைக்க சொன்னார்.பின் உங்களுக்கு என்னடா 50-50 என்று எங்களை கேட்டார்.

பின் 150 பேரும் சந்தன கட்டைகளை பிரித்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர் என்று அந்த அதிகாரி கூறினாராம்.

இப்போது மேடையில் அந்த உயர் அதிகாரி சொன்னது” நாங்கள் 6 பேர் மட்டுமே அந்த 50-50 என்ற வார்த்தையை பேசினோம். அது எப்படி விரப்பனிற்கு தெரிந்தது என்பது தான். இந்த மொத்த கதையையும் கூறியவர் ஒரு D.I.G.

இவ்வளவு செய்தாலும் காமராஜரை பற்றி,எம்.ஜி.ஆரை பற்றி, உலக அரசியல் பற்றி என அனைத்தையும் தெரிந்து வைத்து இருந்தார்.காட்டில் வீரப்பனின் நோய் நொடி ஏற்பட்டால் மருத்துவராகவும் இருந்து அவர்களை குணப்படுத்தினார்.

உணவுகளை 100கி.மி ஒரு இடத்தில் மண்ணில் புதைத்து வைத்து, காட்டில் இடம் பெயரும் பொழுது அதனை பயன்படுத்துவார், இலங்கை தமிழர்களை பற்றியும் பல கருத்துக்களை பதிவு செய்துள்ளார் வீரப்பன் – Veerappan.