What if a cat crosses you?

பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்?

அந்த காலத்தில் போர் நடக்கும் சமயங்களில் வீரர்கள், மற்ற நாடுகளின் மேல் படை எடுப்பார்கள்,அப்படி படை எடுக்கும் பொழுது வழியில் பூனையை பார்த்தால் அல்லது அவர்கள் செல்லும் போது பூனைகள் அவர்களை மறித்து குறுக்க சென்றாலோ அந்த திசையில் செல்ல மாட்டார்கள் ஏன் அப்படி-னு பார்த்தீர்கள் என்றால்,

பூனைகள் வீடுகள் மற்றும் மனித நடமாட்டம் இருக்கும் இடங்களில் மட்டுமே வசிக்கும் எனவே, வீரர்கள் எதிரநாட்டை தாக்க செல்லும் போது பூனைகள் குறுக்க வந்தால் அந்த திசையில் வீடுகள் உள்ளது என்று அர்த்தம், எனவே அங்கு குழைந்தகள் மற்றும் பெண்கள் மட்டுமே இருப்பார்கள், வீட்டில் உள்ள ஆண்கள் போரில் கலந்து கொள்ள சென்று விடுவார்கள்,எனவே படை வீரர்கள் அதை திசை காட்டும் விடயமாக எண்ணி அந்த திசையில் செல்லாமல் வேறு திசையில் படையை முன்னேற்றுவார்கள்.எனவே பூனை குறுக்க போன விளங்காது என்பதை மறந்து, இது போன்ற மூட நம்பிக்கைகளை மறந்து செயல்படுங்கள்!

666: The Number of Beast!

”666″ சாத்தானின் எண்ணா?

சரி, “இந்த 6 என்ற எண்ணை பார்த்து ஏன் கிருஸ்துவ மக்கள் அச்சம் கொள்கிறார்கள் இந்த எண்ணின் பொருள் என்ன?”

New Testament என்ற பைபிளின் புத்தகத்தில் தான் “666” என்ற எண்ணை பயன்படுத்தி உள்ளார்கள்.யாருக்கு புரிதல் இருக்கோ, அவர்களால் சாத்தானின் எண்ணனான “666”-ஐ வைத்து கணக்கு செய்ய முடியும் என்று எழுதி இருக்கிறார்கள்.இதை எழுதி வைத்தப்பின் வெவ்வேறு காலங்களில் வாழந்த மனிதர்களை கிருஸ்துவர்களுக்கு எதிரானவர்கள்(Anti-Christ) என்று குறிப்பிடுகிறார்கள், ஹிட்லரும் அதில் அடக்கம்.

சரி,”ஏன் இப்படியெல்லாம் எழுதி இருக்கிறார்கள் என்று யோசித்தால்??”

இந்தக் கேள்விக்கு பதிலை கண்டுபிடிக்க 2000 ஆண்டு பின் செல்ல வேண்டும்.New Testament என்ற பைபிள் ஹீப்ரு மற்றும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டதாகும்.”ஹீப்ரு மொழியில் உள்ள எழுத்துக்களை ஹீப்ரு எண்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் நீரோ சீசர் என்பவரின் பெயர் வரும்”, உங்களுக்கு புரிதல் ஏற்பட ஒரு பெயரை ஆங்கிலத்தில் உள்ள எழுத்துகள், எண்களை வைத்து பார்க்கலாம்(DEVA-2+5+22+1),இப்படி தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

சரி, “இந்த நீரோ சீசர் யார்??”
நீரோ சீசர் ரோமை ஆண்ட அரசர்,இவர் கிருஸ்துவ மக்களை எதிர்க்கும் ஒரு கொடூரமான அரசனாக இருந்தார், இவர் பேகன் இனத்தை சார்ந்தவர்.கிறிஸ்துவ மதம் மூட நம்பிக்கைகள் உள்ளது என்று கூறி இவர் ஆண்ட 13 ஆண்டுகளில் கோடிக்கணக்கான கிருஸ்துவ மக்களை கொன்றார்.

இப்படிப்பட்ட அரக்க குணம் கொண்டவராகிய நீரோ சீசர் 30 வயதில் இறந்து விட்டார்.பிற் காலத்தில் கிருஸ்துவ மக்கள், இறந்து போன சீசர் மீண்டும் வந்து கூட நம்மை சாக அடிப்பார் என்று அவரின் எண்ணாகிய “666” என்பதை பார்த்து பயப்பட்டார்கள்.ஆனால் தற்போது இது உலக கிருஸ்துவ மக்களின் மத்தியில் ஒரு பெரிய,அழிக்க முடியாத மூட நம்பிக்கையாய் உள்ளது.06.06.2006 அன்று மட்டும் உலகில் உள்ள நிறைய பெண்கள் தங்கள் பிரசவத்தை இதனாலேயே தள்ளிவைத்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

First Life on Earth

உலகின் முதல் உயிரினம் எப்படி தோன்றியது என்பது நம்மில் பலருக்கு இன்றும் தெரியாது தான். அது எப்படி சாத்தியம் ஆச்சு என்பதை இப்போது பார்க்கலாம்.

உலகின் முதல் உயிரினம் தோன்றியது எப்படி?

50 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி பூமி பனிக்கட்டிகளால் சூழ்ந்து இருந்துதாம்,அப்படி இருக்கும் போது சூரியனின் தாக்கம் ஏற்பட்டு பனிக்கட்டிகள் உறைய தொடங்கிச்சாம்.

அப்போ தான் உலகில், ஆறுகள், கடல்கள் என எல்லாம் உருவாச்சாம்.கடல் நீர்ல நல்ல ஊட்டச்சத்து இறங்கி பாக்டீரியா என்ற நுண்ணுயிர் முதலில் தோன்றியதாம்.

பின் காலப் போக்கில், ஊர்வன மிருகங்கள் தோன்றின பின் மீன், தவளை, தோன்ற உருவன விலங்குகளில் ஒரு பாதி மிருகங்கள் தரையில் வாழ தொடங்கியது.

இப்படி விலங்குகள் ஒவ்வொன்றாக திரிந்து திரிந்து இறுதியில் ஆறு அறிவு உள்ள மனித சமுதாயம் தோன்றியதாம்.சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய விலங்கின துறையில் 650 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த பாறை ஒன்றை கண்டு பிடித்து உள்ளனர்.

அப்பாறையை உடைத்துப் பார்த்த ஜோசேன் பிரோக் என்ற ஆய்வாளர்
அதில் பழங்கால விலங்குகளின் மூளை கூரு இருப்பதாக கூறியுள்ளார்.இப்படி உலகம் தோன்றிய கதையை Big Bang Theory என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள்.மேலும் தமிழ் புலவர் அகத்தியர் எழுதிய பாடல் ஒன்றில் அணுவை பற்றியும், அண்ட சராசரம் பற்றியும் குறிப்பிட்டு இருப்பார்.

World’s Weirdest Mothers

எல்லாருடைய அம்மாவுமே தனித்தன்மை பெற்று தங்களுடைய பிள்ளைகளுக்கு ஒரு வரமாக இருப்பார்கள், ஆனால் இந்த பதிவில் வரலாற்றில் இடம்பெற்ற பன்னிரெண்டு தாய்மார்களை பற்றி பார்க்கப் போகிறோம்.

உலகின் வித்தியாஸமான தாய்மார்கள்:

1.) Elizabeth

லிண்டா மற்றும் ஜோசப் என இரண்டு குழந்தைகளின் தாயார் இவர்.என்ன ஒரே வித்தியாசம், முதல் குழந்தைக்கும், இரண்டாம் குழந்தைக்கும் இடையில் 41 வருடம் உள்ளது.ஆமாங்க முதல் பெண் குழந்தையை 19 வயசுல பெத்து எடுத்தாங்க.அடுத்த இரண்டாவது ஆண் குழந்தையை 60 வயதில் பெத்து எடுத்தாங்க.

இவங்களுக்கு முதல் பெண் பிள்ளை,இரண்டாவது பிள்ளைக்கு சகோதரியா இல்லை பாட்டியா அப்படினு சந்தேகமே வந்துரும்…நீண்ட இடைவெளிக்கு பின் குழந்தையை பெத்து எடுத்த பெருமை இவர்களையே சேரும்.

2.) Staicy

2 அடி நான்கு இன்ச் இருக்கும் இவர்,மூன்று பிள்ளைகளுக்கு தாயார்,குழந்தை பெத்துக் கொள்வது உயிருக்கே ஆபத்து என மருத்துவர்கள் கூறிய பின்னும், அதில் உள்ள ஆபாயத்தை விரும்பி குழந்தை பெற்றுக்கொண்டே தான் இருக்கிறார்.இவருக்கு 35 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3.) ஹாரிசோனாவை சேர்ந்த ஆண் ஒருவர், தன்னை முழு பெண்ணாக மாற்றிக்கொண்டு வருடத்திற்கு ஒரு பிள்ளை என 3 பிள்ளைகளை பெற்று உள்ளார், அதுவும் இயற்கையாகவே..உலகின் முதல் ஆண் தாய் இவர் தான்.இவர் மனைவியின் பெயர் நான்சி.

4.) Florida நாட்டில் tropical storm எனப்படும் புயல் அடித்த நேரம், அப்போது ஒரு காரில் தாயாரும்,மகளும் சென்றுக் கொண்டு இருந்தனர், புயல் வந்து வண்டியை முற்றுகையிட தாய் தன் குழந்தையை தனக்குள் வைத்து, புயலால் ஏற்பட்ட பாதிப்பை தான் பெற்று, தன் குழந்தையை காப்பாற்றி தன் உயிரை விட்டு உள்ளார்.

5.) Naidiya

2009 ஆம் ஆண்டு, ஒரே பிரசவத்தில் 8 பிள்ளைகளை பெற்று எடுத்து சாதனை படைத்தார், மேலும் அவருக்கு 6 பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

6.) Caral

13 வருடத்தில் 12 பிள்ளைகளை பெத்து எடுத்த பெருமை இவருக்கு உண்டு, 42 வயது ஆகும் இவர் தான் மேலும் குழந்தைகள் பெற்று எடுக்க விரும்புகிறேன் என்றும் கூறுகிறார்.இதன் மூலம் மாதம் 25000 டாலர் முதல் 35000 டாலர் சம்பாதிப்பதாகவும் கூறுகிறார்.

7.) Rahu deve lohan

தன்னுடைய 69 வயதில் பெண் பிள்ளையை பெற்று எடுத்து உலகின் வயதான தாய் என்ற பெருமையை பெற்று உள்ளார்.

8.) 25 வாரம் 6 நாள் கர்பமாக இருந்து உலகின் மிக சிறிய குழந்தையை பெற்று எடுத்த பெருமை இவருக்கு உண்டு, பெயர் என்ன வென்று தெரியவில்லை, 2004 ஆண்டு இது நடந்தது.

9.) 27 முறை கர்பம் தரித்து 69 பிள்ளைகளை பெற்று எடுத்தார்,18ஆம் நூற்றாண்டில் இது நடந்ததாக கூறுகிறார்..அப்பெண்மணியின் பெயர் எவருக்கும் தெரியவில்லை.

10. ) Jackie.

29 வயதாகும் இவர் selfie எடுத்துக்கொண்டே இருப்பாராம்,ஒரு நாளைக்கு 100 புகைப்படங்கள் இருப்பாராம்.இதனாலேயே இவர் பிரபலமானார்.இவருக்கு 3 பிள்ளைகளும் உண்டு.

11.) காந்தாரி

18 நாட்களில் 100 பிள்ளைகளை பெற்று எடுத்த பெருமை இவருக்கு மட்டுமே இன்று வரை உள்ளது,ஆம்,மஹாபாரத கதையில் வருபவரே இவர்.

Interesting Facts about ATM

இன்றய நவீன வாழ்வில் மனிதர்களின் தேவைக்கு பணம் எடுக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்கும் தானியங்கி கருவி உள்ளது,இது கணினி யுடன் தொடர்பு கொண்ட ஒருமின் அனு இயந்திரம் ஆகும், இதன் மூலம் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கு நேரடியாக செல்லாமல், ATM- ல் எளிமையாக பணம் எடுக்கவும், மற்ற கணக்குக்கு பணம் அனுப்பவும் இது உதவுகிறது, அப்படி ATM பற்றியும் அதன் அட்டைகளை பற்றியும் நாம் அறியாத சில உண்மைகளை பார்ப்போம்!

ATM இயந்திரத்தை பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்:

1.) பொதுவாக டெபிட் கார்டட்டின் ரகசிய எண் நான்கு எண்களாக இருக்கும்,இதற்கு காரணம் என்ன என்பதை என்றாவது யோசித்து பார்த்தது உண்டா? ஏன் 6 எண்களை வைத்து இருக்கலாம் அல்லவா? அதன் காரணத்தை பார்ப்போம்,

1.) ATM இயந்திரத்தின் உருவாக்கத்திற்கு,இயக்கத்திற்கும் முன்னோடியாக இருந்த Adrian Ashfield, முதலில் 6 ரகசிய எண்களை தான் வைத்து இருந்தார்,பின் தன் மனைவியால் 6 எண்களை மனப்பாடம் செய்ய முடியவில்லை என்பதை அறிந்து 4 ஆக மாற்றினார்..இன்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் 6 எண்கள் கொண்ட ரகசிய எண் தான் இருக்கிறது.

2.) ATM இயந்திரத்தை ஒவ்வொரு நாடுகளில் ஒவ்வொரு மாதிரி அழைக்கிறார்கள், அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளில் ATM எனவும்,சில நாடுகளில் Automated Banking Machine எனவும் Cash Points எனவும் குறிப்பிடுகிறார்கள்.

3.) உலகில் 1967ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தான் முதன் முதலில் நடைமுறைக்கு வந்தது.1987 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் HSBC பேங்க் மூலம் இந்தியாவில் முதன் முதலில் ATM machine நடைமுறைக்கு வந்தது.2004 ஆம் ஆண்டு மிதக்கும் ATM-ஐ கேரளா அரசு கொண்டு வந்தது,மேலும் SBI வங்கி இதனை நிறுவியது.

4.) பின் பகுதியில் மேக்னேடிக் ஸ்ட்ரிப்-ம், முன் பகுதியில் 16 இலக்கங்களை கொண்ட எண்களும் இருக்கும்,இந்த 16 எண்ணுக்கு பின் சில ரகசியங்கள் அமைந்து உள்ளன.

முதல் 6 எண்கள்- Issue Identity நான்கில் தொடங்கினால் Visa வகை அட்டை, ஐந்தில் தொடங்கினால் Master Card இது போல் 0 முதல் 9 வரை பல அட்டைகள் உள்ளன.

CARD VERIFICATION VALUE-அட்டையின் காலாவதி.

5.) ஒரு வங்கி கணக்கை நாம் வேறு வங்கி ATM-ல் சென்று எடுத்துக் கொள்கிறோம்..இது எப்படி சாத்தியம்? Indian Bank,Indian Bank ல் தானே பணம் எடுக்க வேண்டும் என்று யோசித்து உள்ளீர்களா?

இதற்கு பெயர் தான் Settlement Funds,ஒரு வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்படும் பணம் வேறு வேறு வங்கியின் ATM இயந்திரமாக இருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை..ஏனெனில் வங்கிகளுக்குள் Settlement Funds என்ற ஒரு பேச்சுவார்த்தை உள்ளது,அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாள் இரவும் வங்கிகளுக்குள் உள்ள கணக்குகளை முடித்துக் கொள்வார்கள்.

தற்போது தங்கம் வழங்கும் ATM இயந்திரங்கள் பல நாடுகளில் நிறுவப்பட்டு வருகிறது.

Loss!

என் வாழ்க்கை எவ்வளவு அழகாய் இருக்க வேண்டும் என்று என்னைக்காட்டிலும் அதிகம் கற்பனை செய்து பார்த்தவள் அவள்.

எட்ட முடியுமா என்று எட்டிநின்ற உயரங்களையெல்லாம் துச்சமென்று எண்ண வைத்தவள்..

இதுவரை யாருமென்னைப் பார்க்கா கோணத்தில் பார்த்து, என் வாழ்வின் கோணத்தை மாற்றியமைத்தவள்..

பாதைத் தேடி புதைந்து கிடந்த எனக்கு, புதிய பாதை அமைக்க விதைவிதைத்தவள்..

தனிமையில் இனிமையாய் இருந்தபோது அசரீரியாய் குரல் கொடுத்தவள்.

உலகப்போரினும் கொடிய உறவுப்போர் மனதில் தொடங்கிய வேளையில் கவசம் தரித்தவள்.

ரசனைகளுக்குள் ஒளியாண்டு தொலைவிருந்தும், மணிக்கணக்கில் அளந்த கதைகளில், ஒருவரையொருவர் அளந்தவள்.

பயங்களற்ற இதயச்சிரிப்பில், அடிவானை மீறிய உலகினழகைக் காட்டியவள்.

காலத்தின் கட்டாயங்களிலும் கல்லறை வரை கவலைகளை மறக்கச் செய்தவள்.

துயர் போக்கி தோள் சாய, தோல்விகளும் துவண்டு போகுமாறு துணை நிற்பவள்.

சொல்லாமற் சொல்லும் வார்த்தைகளுக்கு புதுப்புது அர்த்தங்கள் கொடுத்தவள்.

அவளின்றி ஓரணுவும் என்வாழ்வில் நகராது என்றறிந்தும், வேண்டுமென்றே நகர்ந்து செல்பவள்..

சகிப்பென்றால் கேள்விக்குறி எழுப்பியவனை, கோபத்திற்கு கேள்விக்குறி எழுப்பச் செய்தவள்.

இருப்பினும்,
எதோவோர் தருணத்தில் பிரிவை எதிர்நோக்கிக் காத்துள்ளேன்…

எழுத ஊக்கங்கொடுத்த அவளுக்கே எழுதுகிறேன்,

“காலத்தின் கலக்கங்களில் கலங்காது
ஞாலத்தை வென்று களிக்கையில்
நானுமிருக்க வேண்டிய தருணம்
எனும் அகநெருடலில் எட்டிப்பார்க்கும்
கண்ணீர் துளிகள் அளக்கும்,
வான்வியக்கும் கடலாழ நட்புறவை!”

யாரவள் என்றவள் அறிவாள் தன் அறிவால்!!!!

-சாரா.

Love Marriage Vs Arranged Marriage

90 சதவீத இந்திய மக்கள் Arranged Marraige-ஐ தான் செய்கிறார்கள்.பெற்றோர்கள் செய்து வைக்கும் இந்த திருமணம்,பாதி வெற்றி பெறவில்லை என்றாலும்,குடும்பங்களின் ஒத்துமைக்காக தான் இதை செய்கிறார்கள்.காதல் திருமணம் நல்லதா இல்லை வீட்டில் நடத்தி வைக்கும் திருமணம் நல்லதா என்பதை நாம் காலம் காலமாக பேசி வருகிறோம் இதில் எது சிறந்தது என்று பார்க்கலாம் வாங்க..

காதல் திருமணங்களின் நன்மைகள்:

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்வார்கள்,இதில் காதல் திருமணத்தில் ஒருவர் மற்றொருவரை புரிந்து கொண்டு செய்யப்படும் திருமணம் ஆகும்.

காதல் தான் எல்லா திருமணத்தின் அடித்தளம்,ஆதலால் காதல் திருமணம் என்பது முக்கியமானது ஆகும்.

ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துக்கொண்டதால் திருமணத்திற்கு பின் மனக்கசப்பு இருக்காது.

பொதுவாகவே காதல் திருமணங்களில் ஆண் பெண் சமமாக நடப்பது நன்மை தரும்.

காதல் திருமணங்களின் தீமைகள்:

காதல் திருமணம் செய்த பின் சுயமாக வாழ்வதில் கவனமாக இருப்பார்கள், அதனால் உறவுகளிடம் சில மனக்கசப்பு உண்டாகும்.

காதல் திருமணங்கள் இன்றும் நம் சமூகத்தில் புறக்கணிக்கப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணங்களின் நன்மைகள்:

பெற்றோர்கள் தீர விசாரித்து தங்கள் மகள்,மக்களுக்கு திருமணம் செய்து வைப்பார்கள்.

எதிர்காலத்திதை முன் நிறுத்தி இத்திருமணம் நடக்கும்.

காலப்போக்கில் காதல் வருவது பெற்றோர்கள் செய்து திருமணங்களில் நடக்கும் என்பது ஆய்வு நடத்தி Robert Epstein என்பவர் கூறியுள்ளார்.

பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணங்களின் தீமைகள்:

Arranged Marraige என்ற பெயரில் நிறைய கட்டாய திருமணங்கள் நடத்தி வைக்க படுகிறது.

திருமணத்திற்கு முன் பழக்கம் இல்லாததால் நிறைய பிரச்சனைகளை எதிர்க்கொள்ள நேரிடலாம்.

குடும்பங்களை பற்றி சரியான புரிதல் தம்பதியானர்களுக்கு இல்லாமல் போவது, அதற்கு பின் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

விவாகரத்து என்பது பெற்றோர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில் காதல் திருமணத்தை விட மிகக்குறைவே.

முடிவு:

காதல் திருமணமாக இருக்கட்டும்,பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணமாகட்டும் தம்பதியினர் நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்.

Banned Movies in India

1913-ல் தாதா சாஹிப் இயக்கிய முதல் இந்திய திரைப்படம் ராஜா ஹரிஷ் சந்திரா.பின் 1920-ல் இந்தியன் சினிமாட்டோகிர்ப் ஆக்ட் (Indian Cinematograph Act) என்பது சென்சார் போர்டாக வந்தது.

1920 களில் உள்ள சென்சார் போர்டில் காவலர்கள் தான் பணி புரிந்தார்கள்.1952ஆம் வருடம் பம்பாய் போர்டு ஒப் பிலிம் சென்சார் என்பது வந்தது.இதில் இந்தியா கீழ் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களும் ஒருங்கி இணைக்கப்பட்டது.

பின் இதன் பெயரை சென்ட்ரல் போர்டு ஒப் பிலிம் சென்சார் என்று பெயரை மாற்றினார்கள்.இப்படி சென்சார் போர்டினால் தடை செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களை பார்க்கலாம்.

1.) Un freedom

இரண்டு பெண்கள் காதலித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது போல் கதை அமைக்கப் பட்டு இருக்கும், எனவே இப்படத்தை தடை செய்து விட்டார்கள்.

2.) Sins

கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் இளம் பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ளும் படி காட்சிகளும், திரைக்கதையும் அமைந்து இருந்ததால் இப்படத்தை தடை செய்து விட்டார்கள்.

3.) Water

1938 நடந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.காசியில் உள்ள ஆசிரமங்களில் விதவை பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை காட்டும் திரைப்படம்.இப்படத்தை சென்சார் போர்டு தடை செய்தது.

4.) Ore Oru Gramathule

நிழல்கள் ரவி, லட்சுமி நடித்த இப்படம் 1989-ல் சென்சார் போர்டுனால் தடை செய்யப்பட்டது, பின் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து இப்படத்தை வெளியிட்டார்கள்.ஜாதி வேற்றுமை உள்ளது என்று இப்படத்தை முதலில் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

5.) The pink mirror

கொச்சையான மற்றும் சட்ட விரோதமான கருத்துக்கள் இருப்பதாக கூறி இப்படத்தை தடை செய்தார்கள்.

6.) Fire

சகோதரிகளுக்கு உள்ள காதலையும், அவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது போலவும் காட்சிகளும்,கதையும் அமைக்கப் பட்டதால் இப்படத்தை தடை செய்தார்கள்.

7.) Bandit Queen

பூலான் தேவி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாக கொண்டது தான் இக்கதை, தகாத வார்த்தைகள் இருந்ததனால் இப்படத்தை தடை செய்தார்கள்.

8.) Kamasutra A Tale Of Love

வரலாற்று படமாகிய இதில்,நிறைய காட்சிகளில் நடிகர்கள் நிர்வாணமாக நடித்ததால் இப்படத்தை தடை செய்தார்கள்.மேலும் 16 ஆம் நூற்றாண்டை மைய்யமாக வைத்து எடுக்கப் பட்ட இத்திரைப்படத்தில் தகாத உறவுகளை காட்சி அமைப்பு செய்து இருந்தார்கள் என்றும் தடை செய்தார்கள்.

Kumbakonam School Fire Accident!

கும்பகோணம் தீ விபத்து!

சின்னஞ்சிறு மொட்டுகள்
மலரும் முன்பே
தீக்கு இரையானது…
ஆசையாய் பிள்ளைகளை
பள்ளிக்கு அனுப்பியவர்கள்
கண்டார்களா இனிமேல்
நம் பிள்ளையைப்
பார்க்கவே முடியாதென்று..
இல்லை தன் நண்பர்களை
காண ஓடிச் சென்ற
அந்த பிள்ளைகளுக்கு
தான் தெரியுமா வாழ்க்கையை விட்டே ஓடிச் செல்ல
போகிறோமென்று…
இல்லை பற்றிக் கொண்ட
தீக்கு தான் தெரியுமா
பிள்ளையை மட்டுமல்லாது
பெற்றவர்களின் வயிறையும்
பற்றி எறிய வைக்க
போகிறோமென்று…
இல்லை படியை குறுகலாக
அமைத்த பள்ளிக்கு தான்
தெரியுமா அது விரைவாக
குழந்தைகளின் உயிரை
மேலேற்ற போகிறதென்று…
கடவுளுக்கு மட்டும் தான்
தெரியும் எதற்காக
அந்த மொட்டுகள் வளரும்
முன்பே வாடியது என்று..

Mermaid: Uncovering the Truth

கடற் கன்னிகள்

மனிதர்களின் பல விதமான கண்டுபிடிப்புகளும்,ஆராய்ச்சிகளும் வளர்ந்து வரும் இந்த 21ஆம் நூற்றாண்டில் தான் இவர்கள் அறிவுக்கும் எட்டாத புதிர்களும் இருக்கின்றன.இப்படிப்பட்ட புதிர்களுள் ஒன்று தான் கடற் கன்னிகள், இவர்களை பற்றிய பேச்சு வழக்கு 1000பி.சி முதல் இருந்து வருகிறது.

மனிதர்களின் விஞ்ஞானம் வளர்ந்து, பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டது 19-ம் நூற்றாண்டில் தான்.அப்போது உலகலாவிய கடற் ஆராய்ச்சி அமைப்பு ஓன்று உருவாக்கப்பட்டது.முதலில் திமிங்கிலம், டால்பின் போன்ற உயிரினங்களின் சப்த்தம், மொழிகள் போன்றவற்றை கடலுக்கு அடியில் கருவிகளை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள், ஆனால் இந்த ஆராய்ச்சியில் வேறு விதமான ஓசைகள் கடலுக்கு அடியில் இருந்து வருகிறது என்பதை கண்டு அறிந்தார்கள்.

வித்தியாசமான சத்தம் ஒரு பக்கம்,அது என்னவாக இருக்கும் என்ற மர்மம் இன்னொரு பக்கம்.அந்த காலக்கட்டத்தில் கடலில் நெடு தூரம் பயணிக்கும் மாலுமிகளின் கப்பல்கள் விபத்துக்கு உள்ளாவதற்கு கடல் கன்னிகள் தான் காரணம் என்ற நம்பிக்கை அக்காலம் முதலே பரவி இருந்தது.

முதல் கண்டுபிடிப்பு – கடற் கன்னிகள்

2012-ஆம் ஆண்டு Zimbabwe-வின் நீர் வல துறை அமைச்சர் ஒரு தகவலை பகிர்ந்தார், அது என்ன வென்றால் “கடல் ஓரங்களில் நீர் தேக்க வேலையில் ஈடுபடடு இருந்த வேலையாட்கள் கடற் கன்னிகளால் வேட்டையாடப் பட்டு, துரத்தி அடிக்கப் பட்டார்கள்” என்ற அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆய்வாளர்கள், AQUATIC APES THEORY என்ற ஆய்வில் கடற் கன்னிகளிடம் இருந்து தான் மனித இனமே உருவானது என்று கூறுகின்றனர்.அந்த ஆய்வில் கூறியதாவது “பல லட்ச ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு இருந்தது, அப்போதும் மனிதர்கள் இருந்தார்கள் ஆனால் தண்ணீரில் வாழ்வதற்கு ஏற்ப அவர்கள் உடல் அமைப்பு இருந்தது அப்படி பல நூற்றாண்டிற்கு மனிதன் உயிர் வாழ்ந்தான், அதில் மிஞ்சிய ஒரு இனம் தான் கடற் கன்னிகள்” என்றும் கூறுகிறார்கள்.

Evidence to the Theory

அதாவது AQUATIC APES THEORYயின் சான்றுகள் என்னவென்றால்,
1.) மனிதர்களுக்கு கடற்வாழ் உயிரினங்கள் போல உடலில் ரோமங்கள் இல்லாமல் இருந்தது.
2.) Bi-Pidal என்ற கால் நடையாக மனிதன் மாறியது அவன் நிலத்திற்கு வந்த பிறகு தான் என்றும் கூறுகிறார்கள்.

உலக நாட்டில் பல காலச்சரங்களில் உள்ள கதைகளில் கடற்கன்னிகளின் இருக்கிறார்கள் இவை அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையால் செத்துக்கப்பட்டது என்று பலர் கூறுகிறார்கள், ஆனால் இன்று வரை கடற் கன்னிகள் பற்றி ஒரு ஆதாரப்பூர்வ வெளியிடும் வந்தது இல்லை.

பென்சில்வேனியா-வில் கடற்கன்னிகள் இருக்கிறார்கள் என்ற கருத்தும் சமீபத்தில் பரவி வருகிறது.இப்படி கடற் கன்னிகள் பற்றி பல விதமான கருத்துக்கள் இணையத்தில் பரவி இருந்தாலும், இதைப்பற்றிய ஆர்வமும் தேடலும் இன்றும் யாருக்கும் குறையவில்லை.