World’s Weirdest Mothers

எல்லாருடைய அம்மாவுமே தனித்தன்மை பெற்று தங்களுடைய பிள்ளைகளுக்கு ஒரு வரமாக இருப்பார்கள், ஆனால் இந்த பதிவில் வரலாற்றில் இடம்பெற்ற பன்னிரெண்டு தாய்மார்களை பற்றி பார்க்கப் போகிறோம்.

உலகின் வித்தியாஸமான தாய்மார்கள்:

1.) Elizabeth

லிண்டா மற்றும் ஜோசப் என இரண்டு குழந்தைகளின் தாயார் இவர்.என்ன ஒரே வித்தியாசம், முதல் குழந்தைக்கும், இரண்டாம் குழந்தைக்கும் இடையில் 41 வருடம் உள்ளது.ஆமாங்க முதல் பெண் குழந்தையை 19 வயசுல பெத்து எடுத்தாங்க.அடுத்த இரண்டாவது ஆண் குழந்தையை 60 வயதில் பெத்து எடுத்தாங்க.

இவங்களுக்கு முதல் பெண் பிள்ளை,இரண்டாவது பிள்ளைக்கு சகோதரியா இல்லை பாட்டியா அப்படினு சந்தேகமே வந்துரும்…நீண்ட இடைவெளிக்கு பின் குழந்தையை பெத்து எடுத்த பெருமை இவர்களையே சேரும்.

2.) Staicy

2 அடி நான்கு இன்ச் இருக்கும் இவர்,மூன்று பிள்ளைகளுக்கு தாயார்,குழந்தை பெத்துக் கொள்வது உயிருக்கே ஆபத்து என மருத்துவர்கள் கூறிய பின்னும், அதில் உள்ள ஆபாயத்தை விரும்பி குழந்தை பெற்றுக்கொண்டே தான் இருக்கிறார்.இவருக்கு 35 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3.) ஹாரிசோனாவை சேர்ந்த ஆண் ஒருவர், தன்னை முழு பெண்ணாக மாற்றிக்கொண்டு வருடத்திற்கு ஒரு பிள்ளை என 3 பிள்ளைகளை பெற்று உள்ளார், அதுவும் இயற்கையாகவே..உலகின் முதல் ஆண் தாய் இவர் தான்.இவர் மனைவியின் பெயர் நான்சி.

4.) Florida நாட்டில் tropical storm எனப்படும் புயல் அடித்த நேரம், அப்போது ஒரு காரில் தாயாரும்,மகளும் சென்றுக் கொண்டு இருந்தனர், புயல் வந்து வண்டியை முற்றுகையிட தாய் தன் குழந்தையை தனக்குள் வைத்து, புயலால் ஏற்பட்ட பாதிப்பை தான் பெற்று, தன் குழந்தையை காப்பாற்றி தன் உயிரை விட்டு உள்ளார்.

5.) Naidiya

2009 ஆம் ஆண்டு, ஒரே பிரசவத்தில் 8 பிள்ளைகளை பெற்று எடுத்து சாதனை படைத்தார், மேலும் அவருக்கு 6 பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

6.) Caral

13 வருடத்தில் 12 பிள்ளைகளை பெத்து எடுத்த பெருமை இவருக்கு உண்டு, 42 வயது ஆகும் இவர் தான் மேலும் குழந்தைகள் பெற்று எடுக்க விரும்புகிறேன் என்றும் கூறுகிறார்.இதன் மூலம் மாதம் 25000 டாலர் முதல் 35000 டாலர் சம்பாதிப்பதாகவும் கூறுகிறார்.

7.) Rahu deve lohan

தன்னுடைய 69 வயதில் பெண் பிள்ளையை பெற்று எடுத்து உலகின் வயதான தாய் என்ற பெருமையை பெற்று உள்ளார்.

8.) 25 வாரம் 6 நாள் கர்பமாக இருந்து உலகின் மிக சிறிய குழந்தையை பெற்று எடுத்த பெருமை இவருக்கு உண்டு, பெயர் என்ன வென்று தெரியவில்லை, 2004 ஆண்டு இது நடந்தது.

9.) 27 முறை கர்பம் தரித்து 69 பிள்ளைகளை பெற்று எடுத்தார்,18ஆம் நூற்றாண்டில் இது நடந்ததாக கூறுகிறார்..அப்பெண்மணியின் பெயர் எவருக்கும் தெரியவில்லை.

10. ) Jackie.

29 வயதாகும் இவர் selfie எடுத்துக்கொண்டே இருப்பாராம்,ஒரு நாளைக்கு 100 புகைப்படங்கள் இருப்பாராம்.இதனாலேயே இவர் பிரபலமானார்.இவருக்கு 3 பிள்ளைகளும் உண்டு.

11.) காந்தாரி

18 நாட்களில் 100 பிள்ளைகளை பெற்று எடுத்த பெருமை இவருக்கு மட்டுமே இன்று வரை உள்ளது,ஆம்,மஹாபாரத கதையில் வருபவரே இவர்.

Banned Movies in India

1913-ல் தாதா சாஹிப் இயக்கிய முதல் இந்திய திரைப்படம் ராஜா ஹரிஷ் சந்திரா.பின் 1920-ல் இந்தியன் சினிமாட்டோகிர்ப் ஆக்ட் (Indian Cinematograph Act) என்பது சென்சார் போர்டாக வந்தது.

1920 களில் உள்ள சென்சார் போர்டில் காவலர்கள் தான் பணி புரிந்தார்கள்.1952ஆம் வருடம் பம்பாய் போர்டு ஒப் பிலிம் சென்சார் என்பது வந்தது.இதில் இந்தியா கீழ் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களும் ஒருங்கி இணைக்கப்பட்டது.

பின் இதன் பெயரை சென்ட்ரல் போர்டு ஒப் பிலிம் சென்சார் என்று பெயரை மாற்றினார்கள்.இப்படி சென்சார் போர்டினால் தடை செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களை பார்க்கலாம்.

1.) Un freedom

இரண்டு பெண்கள் காதலித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது போல் கதை அமைக்கப் பட்டு இருக்கும், எனவே இப்படத்தை தடை செய்து விட்டார்கள்.

2.) Sins

கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் இளம் பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ளும் படி காட்சிகளும், திரைக்கதையும் அமைந்து இருந்ததால் இப்படத்தை தடை செய்து விட்டார்கள்.

3.) Water

1938 நடந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.காசியில் உள்ள ஆசிரமங்களில் விதவை பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை காட்டும் திரைப்படம்.இப்படத்தை சென்சார் போர்டு தடை செய்தது.

4.) Ore Oru Gramathule

நிழல்கள் ரவி, லட்சுமி நடித்த இப்படம் 1989-ல் சென்சார் போர்டுனால் தடை செய்யப்பட்டது, பின் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து இப்படத்தை வெளியிட்டார்கள்.ஜாதி வேற்றுமை உள்ளது என்று இப்படத்தை முதலில் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

5.) The pink mirror

கொச்சையான மற்றும் சட்ட விரோதமான கருத்துக்கள் இருப்பதாக கூறி இப்படத்தை தடை செய்தார்கள்.

6.) Fire

சகோதரிகளுக்கு உள்ள காதலையும், அவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது போலவும் காட்சிகளும்,கதையும் அமைக்கப் பட்டதால் இப்படத்தை தடை செய்தார்கள்.

7.) Bandit Queen

பூலான் தேவி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாக கொண்டது தான் இக்கதை, தகாத வார்த்தைகள் இருந்ததனால் இப்படத்தை தடை செய்தார்கள்.

8.) Kamasutra A Tale Of Love

வரலாற்று படமாகிய இதில்,நிறைய காட்சிகளில் நடிகர்கள் நிர்வாணமாக நடித்ததால் இப்படத்தை தடை செய்தார்கள்.மேலும் 16 ஆம் நூற்றாண்டை மைய்யமாக வைத்து எடுக்கப் பட்ட இத்திரைப்படத்தில் தகாத உறவுகளை காட்சி அமைப்பு செய்து இருந்தார்கள் என்றும் தடை செய்தார்கள்.

Mermaid: Uncovering the Truth

கடற் கன்னிகள்

மனிதர்களின் பல விதமான கண்டுபிடிப்புகளும்,ஆராய்ச்சிகளும் வளர்ந்து வரும் இந்த 21ஆம் நூற்றாண்டில் தான் இவர்கள் அறிவுக்கும் எட்டாத புதிர்களும் இருக்கின்றன.இப்படிப்பட்ட புதிர்களுள் ஒன்று தான் கடற் கன்னிகள், இவர்களை பற்றிய பேச்சு வழக்கு 1000பி.சி முதல் இருந்து வருகிறது.

மனிதர்களின் விஞ்ஞானம் வளர்ந்து, பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டது 19-ம் நூற்றாண்டில் தான்.அப்போது உலகலாவிய கடற் ஆராய்ச்சி அமைப்பு ஓன்று உருவாக்கப்பட்டது.முதலில் திமிங்கிலம், டால்பின் போன்ற உயிரினங்களின் சப்த்தம், மொழிகள் போன்றவற்றை கடலுக்கு அடியில் கருவிகளை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள், ஆனால் இந்த ஆராய்ச்சியில் வேறு விதமான ஓசைகள் கடலுக்கு அடியில் இருந்து வருகிறது என்பதை கண்டு அறிந்தார்கள்.

வித்தியாசமான சத்தம் ஒரு பக்கம்,அது என்னவாக இருக்கும் என்ற மர்மம் இன்னொரு பக்கம்.அந்த காலக்கட்டத்தில் கடலில் நெடு தூரம் பயணிக்கும் மாலுமிகளின் கப்பல்கள் விபத்துக்கு உள்ளாவதற்கு கடல் கன்னிகள் தான் காரணம் என்ற நம்பிக்கை அக்காலம் முதலே பரவி இருந்தது.

முதல் கண்டுபிடிப்பு – கடற் கன்னிகள்

2012-ஆம் ஆண்டு Zimbabwe-வின் நீர் வல துறை அமைச்சர் ஒரு தகவலை பகிர்ந்தார், அது என்ன வென்றால் “கடல் ஓரங்களில் நீர் தேக்க வேலையில் ஈடுபடடு இருந்த வேலையாட்கள் கடற் கன்னிகளால் வேட்டையாடப் பட்டு, துரத்தி அடிக்கப் பட்டார்கள்” என்ற அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆய்வாளர்கள், AQUATIC APES THEORY என்ற ஆய்வில் கடற் கன்னிகளிடம் இருந்து தான் மனித இனமே உருவானது என்று கூறுகின்றனர்.அந்த ஆய்வில் கூறியதாவது “பல லட்ச ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு இருந்தது, அப்போதும் மனிதர்கள் இருந்தார்கள் ஆனால் தண்ணீரில் வாழ்வதற்கு ஏற்ப அவர்கள் உடல் அமைப்பு இருந்தது அப்படி பல நூற்றாண்டிற்கு மனிதன் உயிர் வாழ்ந்தான், அதில் மிஞ்சிய ஒரு இனம் தான் கடற் கன்னிகள்” என்றும் கூறுகிறார்கள்.

Evidence to the Theory

அதாவது AQUATIC APES THEORYயின் சான்றுகள் என்னவென்றால்,
1.) மனிதர்களுக்கு கடற்வாழ் உயிரினங்கள் போல உடலில் ரோமங்கள் இல்லாமல் இருந்தது.
2.) Bi-Pidal என்ற கால் நடையாக மனிதன் மாறியது அவன் நிலத்திற்கு வந்த பிறகு தான் என்றும் கூறுகிறார்கள்.

உலக நாட்டில் பல காலச்சரங்களில் உள்ள கதைகளில் கடற்கன்னிகளின் இருக்கிறார்கள் இவை அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையால் செத்துக்கப்பட்டது என்று பலர் கூறுகிறார்கள், ஆனால் இன்று வரை கடற் கன்னிகள் பற்றி ஒரு ஆதாரப்பூர்வ வெளியிடும் வந்தது இல்லை.

பென்சில்வேனியா-வில் கடற்கன்னிகள் இருக்கிறார்கள் என்ற கருத்தும் சமீபத்தில் பரவி வருகிறது.இப்படி கடற் கன்னிகள் பற்றி பல விதமான கருத்துக்கள் இணையத்தில் பரவி இருந்தாலும், இதைப்பற்றிய ஆர்வமும் தேடலும் இன்றும் யாருக்கும் குறையவில்லை.

Top 5 Mysteries of the World

விஞ்ஞானிகளை அதிர வைத்த 5 பழங்கால மர்மங்கள்!

ஆயிரம் ஆயிரம் வருடங்களாக மண்ணில் புதைந்து இருக்கும் மனிதர்களின் பழங்கால நாகரிகத்தை அறிய தொல்லியல் வல்லுநர்கள் படும் பாடு என்னவென்று நம் அனைவருக்கும் தெரியும்.ஆனாலும் அகழ்வாராய்ச்சியில் சிக்கும் சில பொருட்கள் தொல்லியல் வல்லுநர்களை தலை சுற்ற வைக்கிறது.அப்படி இருக்கும் 5 மர்மங்களை பற்றி இப்போது பார்க்கலாம்,

Band of Holes:

பெருவில் நாஸ்கா பீடபூமியில் பிஸ்கோ பள்ளத்தாக்கில் சுமார் 5,000-6,000 வரை உள்ள சிறு குழிகளின் தொடர்ச்சி காணப்படுகிறது.இக்குழிகள் 1.5கிமீ அளவுக்கு நீளமாக சென்று ஒரு மலையில் சேர்கிறது.அக்காலகட்டத்தில் இக்குழி கட்டப்பட்டு இருக்கிறது என்றும் புரிந்து கொள்ளும் வல்லுநர்களால்,இக்குழி எதற்காக கட்டப்பட்டு உள்ளது என்பதை அறிய முடியவில்லை.இதனை Bank Of Holes என்றும் அழைப்பார்கள்.

Shell Grotto (ஷெல்-கடற் சங்குகள்):

ஷெல் கிரோட்டோ என்பது ஒரு அலங்கரிக்கப்பட்ட பாதையாகும்,இது Margate, Kent-ல் உள்ளது. ஷெல் கோட்டை பூமிக்கு அடியில் கட்டப்பட்டு இருக்கும் கோட்டை ஆகும். சுவர்கள் மற்றும் கூரையின் அனைத்து மேற்பரப்புகளும் கிட்டத்தட்ட சீசஷ்களால் உருவாக்கப்பட்டவை 2,000 சதுர அடி 190 மீ 2 மொசைக் (அல்லது) 4.6 மில்லியன் ஷெல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. இது 1835 இல் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இதன் வயது (மற்றும்) நோக்கம் இன்றளவும் அறியப்படவில்லை.3000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

Tell Al-Ubaid:

ஈராக்கில் உள்ள தி கியர் என்ற இடத்தில 1919 ஆண்டு அகழ்வாராயிச்சி செய்யும் போது ஒரு கட்டிடத்தை கண்டு அறிந்தனர்,அங்கு ஆண் மற்றும் பெண் சிலைகள் கிடைத்தன,மேலும் இவர்களின் தலை பல்லியின் வடிவத்தை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.பாதம் கொட்டை வடிவ கண்களுடனும்,தலை கவசம் அணிந்தும்,தோளில் பட்டையுடனும் இருக்கிறதாம்.பல ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதர்கள் இப்படித்தான் இருந்து இருக்க கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Atacama Skeleton:

அட்டகாமா பாலைவனத்தில் இருந்து ஒரு எலும்புக்கூட்டை “alien” என்று எண்ணி வைத்து இருந்தார்கள்.ஆனால் மரபணு சோதனையில் அது ஒரு பெண் என்றும் அறியப்படாத எலும்புக் கோளாறு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.இதனை Atacama Skeleton என்றும் அழைப்பார்கள்,மேலும் 2003-இல் கண்டுபிடிக்கப்பட்டது.

The Devil’s Bible:

The Devil’s Bible 36 அங்குல உயரம், 20 அங்குல அகலம், 8.7 அங்குல தடிமன் கொண்டது.இப்புத்தகத்தை முடிக்க முப்பது ஆண்டுகள் வரை அது எடுக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இது 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது.பேய்களின் முழு உருவங்களை கொண்டுள்ளமையால் இதனை டெவில்ஸ் பைபிள் என்று அழைக்கிறார்கள்.

Modern Draupadi

நமக்கு தெரிந்த இந்திய வரலாற்றுக் கதைகளில் ஒரு பெண்ணிற்கு 5 கணவர்கள் இருந்தது மகாபாரதத்தில் மட்டும் தான், ஆனால் அப்படி ஒன்று இப்போது சாத்தியமா என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.ஆனால் அப்படி ஒருவர் இருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.

அந்தப் பெண்ணின் பெயர் ரோஜா, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து சகோ தரர்களை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.டேராடூன்-ல் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் இவர்,மேலும் தான் இந்த 5 சகோதரர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார்.

இவர்களது குடும்பத்தை பொறுத்தவரை இம்மாதிரி திருமணம் செய்து கொள்வது பாரம்பரியம் என்று கூறும் இவர்கள், இதனை எதிர்காலத்திலும் நாங்கள் தொடருவோம் என்று2 கூறுகிறார்கள்.

அந்த கிராமத்தில் பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என்ற காரணத்தினால் சகோதரத்து பலதார திருமணம் வழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ரோஜாவிற்கு ஒரு குழந்தை உள்ளது,இக்குழந்தை ஐந்து சகோதரர்களில் எந்த சகோதரருக்கு பிறந்தார் என்பதே அவர்களுக்கு தெரியாதாம்.ரோஜா முதன் முதலில் குட்டு வர்மா என்றவரை மணம் முடித்தார்.பின் அவரது தம்பி மற்றும் பெரிய அண்ணன் பஜ்ஜூ வர்மாவையும்,அதன் பிறகு சாந்த் வர்மாவையும், பின் கோபால் வர்மாவையும் மற்றும் தினேஷ் வர்மாவையும் ஒன்றன் பின் ஒன்றாக மணம் முடித்தார்.

ரோஜாவை போலவே அவரது தாயாரும் ஒரே குடும்பத்தில் பிறந்த மூன்று சகோதரர்களை திருமணம் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.