Veerappan: The Untold Story!

வீரப்பன் – Veerappan என்ற பெயரை சொன்னாலே பல பேருக்கு ஈரக்கொலை நடுங்கும், அப்படிப்பட்ட வீரப்பன் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? தெரிந்துகொள்ளலாமா?

வீரப்பன் வரலாறு – Veerappan History :

1952ஆண்டு ஜனவரி மாதம்,கோபிநத்தம் என்ற ஊரில் பிறந்தார்,முத்து லட்சுமி என்ற அம்மையாரை திருமணம் செய்தார் வீரப்பன்,இவர்களுக்கு 2 பிள்ளைகளும் பிறந்தார்கள், இது சொந்த வாழ்க்கை. 1962 ஆம் ஆண்டு தன் 10 வயதில் யானை ஒன்றை வேட்டையாடி, மேலும் 3 வனத்துறை அதிகாரிகளை கொன்றார் வீரப்பன்,இதுவே அவரது முதல் குற்றமாகும்.

தன் ஊரில் பெரியவர் ஒருவரோடு சேர்ந்து சந்தன மரத்தை வெட்டி அதனை கடத்தி பணம் ஈட்டினார். இப்படி சந்தன கடத்தலில் 4 வகையான கூட்டம் இருந்தது, அதில் விரப்பனும் தனக்கென்று தனி கூட்டத்தை சேர்த்ததார். சந்தன மரங்களை வெட்டுவது அரசுக்கு எதிரானது என்பதால் வனத்துறை அதிகாரிகளுக்கும்,காவல்துறைக்கும் நெருக்கடி அதிகம் ஆகியது.

அப்போது, காவல் துறை வீரப்பனை அழைத்து நீ மற்ற கூட்டத்தின் தலைவர்களை கொன்று விட்டு, தனியாக இத்தொழிலை செய், எங்களுக்கும் கெடு பிடி அதிகம் ஆகிவிட்டது என்று கூற மீதி இருப்பவர்களை வெட்டி காவேரி ஆற்றில் வீசுகிறார் வீரப்பன்.இப்பொழுது சந்தன கடத்தல் தொழிலில் மீதம் இருப்பது வீரப்பன் மட்டும் தான்,ஆனால் காவல் துறை அவரை கைது செய்கிறது..கைது செய்து சிறையிலும் அடைக்கிறது.

சிறையில் இருந்த காலகட்டத்தில், அவரை காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து கொல்லப் போவதாக ஒரு காவல் துறை அதிகாரியின் மூலமாக வீரப்பனின் காதுகளில் விழ,அவர் அந்தச் சிறையை விட்டு தப்பித்தார்..காவல் துறை நமக்கு தோரோகம் இழைத்து விட்டது என்று எண்ணிய வீரப்பன் இங்கு தான் கோபம் அடைகிறார்..பின் வீரப்பன் காடு என்ற காட்டில் தன் கோட்டையை நிறுவினார் வீரப்பன், 14000 sq.km பரப்பளவை கொண்டது இக்காடு.

இப்போது காவல்துறை அதிகாரிகளை பழி தீர்க்கவும் ஆரம்பித்தார்,1990-களில் கர்நாடகவை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்ற உயர் காவல் துறை அதிகாரியை கொன்று, அவர் தலையை கழுதையின் மேல் வைத்து அனுப்பினார் வீரப்பன்.. இப்படி தொடர்ந்து காவல் துறை மீது 3 கொலைகள் நடக்க, கர்நாடக மாநிலம் வீரப்பனை பிடிக்க ஹரி கிரிஷ்ணா என்ற SP தலைமையில் காவல் படையை காட்டிற்குள் அனுப்புகிறது.இது செய்தியாக கூட வந்தது.

சில நாட்களில் 40 பேரை வீரப்பன் கொன்றதாக செய்தி பத்திரிகை ஒன்றுக்கு வர காவல் துறையில் 6 பேர்  மட்டுமே இறந்ததாக தகவல் வந்தது. SP, Inspector போன்ற 6 பேர் மட்டுமே இறந்ததாக காவல் துறை கூறியது..அந்த காலத்தில் வீரப்பன் முகத்தில் மீசை இருக்காது.

90-களில் வீரப்பன் அவர்களை பிடித்து தந்தால் 40 லட்சம் பரிசு தொகை அறிவிக்க பட்டு இருந்தது.93-களில் Bomb Blast ஒன்று பாலாற்றில் நடந்தது.இதில் 22 காவல் அதிகாரிகள் இறந்தனர்கள்.

இதன் பின்பு தான் பிரபல பத்திரிகை ஒன்று வீரப்பனை பேட்டி எடுத்து அவரின் புகைப்படங்களை வைத்து இருந்தது,முதல் முதலில் வீரப்பன் மீசையுடன் காட்சியளித்தது அந்த புகைப்படங்களில் தான்.

இந்த பாலாறு Bomb Blast சம்பவத்திற்கு பிறகு அந்த பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்களுக்கு காவல் துறை அதிகாரிகள் பாலியல் தொல்லைகள் மற்றும் பல இன்னல்களை கொடுத்து உள்ளார்கள் எனவும் பத்திரிகை ஒன்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

93-களில் வீரப்பனின் கடத்தல்கள் அதிகம் ஆக, பத்திரிகைகள் உண்மை செய்தியை கொண்டு வர, காவல் துறை அதிகாரிகள் தவறான செய்திகளை மட்டுமே பரப்பி வந்தாக தகவல்.

இம்மாதிரியான கொடுமைகள் தன்னால் மக்கள் அனுபவிக்கிறார்கள் என தெரிந்த பின்,130 கொலைகள் செய்த வீரப்பன் தான் சரண் அடைகிறேன் என்று கூற பத்திரிகை ஆசிரியர் ஒருவர் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிடையே தூதுவராக செல்கிறார்..அப்படி செல்லும் முன் விரப்பனிடம் ஒரு கோரிக்கையும் வைக்கிறார். நீங்கள் இன்று முதல் யாரையும் கொலை செய்யக்கூடாது, கடத்த கூடாது, அப்படி என்றால் உங்கள் சரண்டர் பற்றி நான் பேசுகிறேன் என்று கூறுகிறார்.

பத்திரிகை ஆசிரியர் கூறிய படி 2 வருடங்கள் வீரப்பன் எந்த வித தீய வழிகளிலும் ஈடுபடவில்லை. இதனிடையே காவல் துறை இவர் எந்த தவறும் செய்யாமல் இருப்பதை பார்த்து வீரப்பனை கொல்ல சரியான தருணம் இது தான் என்று களத்தில் இறங்க,வேறு வழி இல்லாமல் 1997-ல் மீண்டும் 9 காவலர்களை கடத்துகிறார்.

இதன் பின் அன்று இருந்த இரண்டு மாநில முதல்வர்களும் ஒன்று சேர்ந்து நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களை அரசு தூதுவராக அனுப்புகிறார்கள்.

இத்தியாவிலேயே இப்படிப்பட்ட சம்பவம் இன்று வரை நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.பின் 2000த்தில் கர்நாடகா சூப்பர் ஸ்டார் ராஜ் குமார் அவர்களை கடத்தினார் வீரப்பன்..108 நாட்களுக்கு பிறகே ராஜ் குமார் வெளியே வந்தார்.

2004 ஆம் ஆண்டு விஜய குமார் தலைமையில் ஒரு குழு சென்று, வீரப்பனை கொன்றதாக ஒரு தகவலும்..விஷம் வைத்து தான் வீரப்பன் கொல்லப்பட்டார் எனவும் இரண்டு விதமான தகவல்கள் உள்ளது. இதில் எது உண்மை என்று இன்று வரை தெரியவில்லை.

ஆனால் காவல்துறையின் தகவல்களின் படி வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டார் என்பதே ஆகும்.

வீரப்பனின் சுவாரஸ்யமான கதைகள் – Interesting Stories of Veerappan:

வீரப்பனின் சில சுவாரஸ்யமான தகவல்கள் சில, அதனை மேலும் அறிய கீழ் வரும் உண்மை கதையை படியுங்கள், கோயம்புத்தூரில் 1997-ல் விழா ஒன்று நடந்தது அதில் வீரப்பனை பிடிக்க முயன்ற உயர் அதிகாரி ஒருவர் மேடையில் சொன்ன தகவல் இது, 1990-களில் காவல் துறை அதிகாரிகள் சந்தன கட்டைகளை மீட்க ஒரு ஏற்பாடு செய்தார்கள்.

அந்த ஏற்பாட்டிற்கு முன் தமிழ் நாட்டை சேர்ந்த 6 உயர் காவல் துறை அதிகாரிகள் மட்டும்,வட்டாமாக அமர்ந்து பேசினோம் அதில் நானும் ஒருவன்.

என்ன பேசினோம் என்றால் நாம் கைப்பற்றப் போகும் சந்தன கட்டைகளை நாம் மட்டும் பிடித்ததாக தமிழக அரசாங்கத்திற்கு கணக்கு காட்ட வேண்டாம், கர்நாடக அரசு போலீசாரும் இதை பறிமுதல் செய்ததாக அரசாங்கதிடம் கணக்குகளை காட்டலாம், எனவே நம்ம 50 அவங்க 50 ..50-50 என்ற கணக்கே அரசாங்கத்திற்கு காட்டுவோம் என தங்களது பேச்சை முடித்துக் கொண்டு,2 வாகனங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் காவல்துறை அதிகாரிகளையும் அனுப்பினார்கள் அந்த 6 பேரும், சென்ற வாகனம் 3 நாட்கள் ஆகியும் திரும்ப வில்லை.என்னடா இது இன்னும் வர வில்லை என என்னிய அதிகாரி, நேரில் சென்று பார்க்க புறப்பட்டார்..(மேடையில் பேசுபவரே அங்கு சென்றது)

அங்கு சென்று பார்த்தால், வாகனம் இரண்டும் எரிந்து கிடந்தது,காவல் துறை அதிகாரிகள் மரத்தில் கட்டிவைக்க பட்டு இருந்தார்கள்..தண்ணீரை முகத்தில் தெளித்து அவர்களை தெளிய வைத்தபின் அவர்கள் கூறியது என்ன தெரியுமா? நாங்கள் இங்கே வந்து சந்தன கட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தோம், அப்போது பெரிய மீசை வைத்த ஒருவர் 150 பேருடன் வந்தார்,எங்களை மரத்தில் கட்டி வைக்க சொன்னார்.பின் உங்களுக்கு என்னடா 50-50 என்று எங்களை கேட்டார்.

பின் 150 பேரும் சந்தன கட்டைகளை பிரித்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர் என்று அந்த அதிகாரி கூறினாராம்.

இப்போது மேடையில் அந்த உயர் அதிகாரி சொன்னது” நாங்கள் 6 பேர் மட்டுமே அந்த 50-50 என்ற வார்த்தையை பேசினோம். அது எப்படி விரப்பனிற்கு தெரிந்தது என்பது தான். இந்த மொத்த கதையையும் கூறியவர் ஒரு D.I.G.

இவ்வளவு செய்தாலும் காமராஜரை பற்றி,எம்.ஜி.ஆரை பற்றி, உலக அரசியல் பற்றி என அனைத்தையும் தெரிந்து வைத்து இருந்தார்.காட்டில் வீரப்பனின் நோய் நொடி ஏற்பட்டால் மருத்துவராகவும் இருந்து அவர்களை குணப்படுத்தினார்.

உணவுகளை 100கி.மி ஒரு இடத்தில் மண்ணில் புதைத்து வைத்து, காட்டில் இடம் பெயரும் பொழுது அதனை பயன்படுத்துவார், இலங்கை தமிழர்களை பற்றியும் பல கருத்துக்களை பதிவு செய்துள்ளார் வீரப்பன் – Veerappan.

Human Evolution

பூமியில் மனித இனம் உருவான வகை, Human Evolution:

பூமியில் மனித இனம் உருவானதை – Human Evolution விளக்குவதற்கு பரந்து விரிந்த இந்த கண்டத்தில் மனிதனது செயற்கை கண்களுக்கு எட்டிய தொலைவு வரையிலான தேடலில் முடியும், நாம் வாழும் இந்த புவியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

1. படைப்புக் கொள்கை.
இறைவனால் இந்த உலகில் மனிதர்கள் படைக்கப்பட்டார்கள் என குறிப்பிடும் கொள்கை இதுவாகும்.
இக்கொள்கை19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை எவ்வித மாற்றுக்கருத்துமின்றி ஐரோப்பா மற்றும் மேற்கத்தைய நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கையாகும். உலகின் பல பகுதிகளில் இக்கொள்கை பரப்பப்பட்டது.

கிறித்தவர்களின் அடிப்படையில், ஆதாம் ஏவால் எனும் இருவரை முதலில் இறைவன் படைத்ததாகவும் அதில் இருந்து தோன்றிய சந்ததிகளே நாம் தான் என கூறப்படுகிறது.

2. கூர்ப்புக்கொள்கை
கூர்ப்புக்கொள்கையானது டார்வின் எனும் விஞ்ஞானியிடம் இருந்து ஆரம்பமானது. அதனடிப்படையில் மனிதன், குரங்கில் இருந்து பிரிந்த ஒரு கிளை இனம் என நிறுவப்படுகிறது.

அதாவது 2013 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒரு அறிவியல் கருத்தரங்கில் சில விஞ்ஞானக்குழுக்கள் மனிதன் மீனில் இருந்து தோற்றம் பெற்றதாக கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர்கள் குறிப்பிட்ட காரணங்கள் மனிதன் சிசுவாக இருக்கும் போது கைகளின் அமைப்பு, மனித மூளை வளர்ச்சிக்கு தேவைப்படும் மீன் உணவுச்சத்து மற்றும் பிறந்த குழந்தை மூச்சை அடக்கி நீந்தும் திறன் கணிசமாக உள்ளது.

3. வேற்றுக்கிரக இன கலப்பு கொள்கை
இந்த கொள்கையின் படி, வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்த ஒரு இனமானது பூமியில் இருந்த குரங்கினத்துடன் கலவையில் ஈடுபட்ட விளைவு தான் தோன்றிய உயிரினமே மனிதர்கள் என கூறப்படுகிறது. இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்கள, பூமியில் மனித இனம் மட்டும் திறமைகளுடன் காணப்படுவது ஆகும், மரபணுவில் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றங்களை முன்வைக்கிறார்கள்.

4. வேற்றுக்கிர பரீ சார்த்தப் படைப்பு.
மனித இனமானது பூமிக்கு சொந்தமில்லாத ஒரு இனம் எனவும், வேற்றுக்கிரகத்தில் இருந்து குடியேறியிருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு முன்வைக்கும் சில காரணங்ளில் , மனிதனின் இடுப்பு பகுதியானது பூமியின் ஈர்ப்புக்கு ஏற்ப அமைந்து இருக்கும், ஏனைய உயிரினங்களுடன் ஒப்பிடுகையில் மனித இனம் அதீத நோய்த்தாக்கல்களுக்கு உள்ளாவதை காரணம் காட்டுகிறார்கள்.

இப்பிரிவிலேயே இன்னோர் கருத்துப்படி; வேற்றுலகத்தில் இருக்கும் அதீத அறிவு வாய்ந்த ஒரு சமூகத்தினரால் உருவாக்கப்பட்டு பரீட்சார்த்த ஒரு இனம் தான் மனித இனம் என கூறப்படுகிறது.

Crow Astrology

உங்கள் மீது காகம் எச்சமிட்டு விட்டதா? அதற்கு என்ன அர்த்தம் என உங்களுக்கு தெரியுமா ?

காகம் – Crow எந்த உணவையும் தனக்கென்று சேர்க்காமல், பிற காகங்களுக்கும் கொடுத்து பகிர்ந்து உண்ணும் சிறப்பியல்பை கொண்ட பறவையாகும்.நமது அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவையாக உள்ள காகத்தை இறந்த நம் முன்னோரின் அம்சமாக கருதுகிறோம்.அந்த வகையில் நம் வாழ்வில் காகத்தினால் ஏற்படும் சில சகுனங்கள் பற்றி காண்போம்.பயணத்தின் போது ஏற்படும் காகத்தின் சகுனம் என்ன?

ஒருவரின் பயணத்தின் போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போனால் அது தன நஷ்டத்தையும் உண்டாக்குமாம்.வெளியில் பயணிக்கும் ஒருவரை நோக்கிக் காகம் கரைந்து கொண்டே பறந்து வந்தால், அந்த பயணத்தைத் தவிர்த்து விட வேண்டும் என கூறுவர்.ஒருவர் பயணிக்கும் போது ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவூட்டும் காட்சி தென்பட்டால், அவர்களின் பயணம் இனிதாகுமாம்.வெளியில் செல்லும் போது, ஆண் மற்றும் பெண் காகங்கள் ஒன்றாக இருந்து கரைந்து கொண்டிருந்தால், அவர்களின் வீட்டில் பெண்களின் சேர்க்கை ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

ஒருவருடைய பயணத்தின் போது, அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவருடைய உடல் மற்றும் நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால், அகால மரணம் அவருக்கு நேரிடலம் என்று கூறுகின்றனர்.ஒருவரின் வாகனம், குடை, காலணி ஆகியவற்றின் மீது காகம் எச்சம் விட்டால், அவர்களின் பயணத்தின் போது, உணவுக்குப் பஞ்சம் இருக்காதாம்.ஒருவர் யாத்திரைக்கு புறப்படும் போது, காகம் எந்தப் பொருளைத் தன் அலகால் கொண்டு வருகிறதோ, அந்தப் பொருளின் வகையிலான லாபம் பயணத்தில் கிட்டும்.ஒரு பெண்ணின் தலையில் ஏந்தியுள்ள குடத்தின்மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால், தன லாபம் மற்றும் பெண்களால் பல நன்மை கிடைக்குமாம்.காகத்தின் செயலும் அதன் திசை சகுனமும் என்ன?

ஒருவருடைய வீட்டின் தென்கிழக்கு திசையை நோக்கிக் காகம் கரைந்தால், தங்கம் சேரும்.
வீட்டின் தெற்கு திசையை நோக்கி, கரைந்தால், உளுந்து, கொள்ளு போன்ற தானிய லாபம் கிடைக்குமாம்.
தென்மேற்கு திசையை நோக்கி கரைந்தால், குதிரை, தயிர், எண்ணெய், உணவு போன்ற உணவுகள் சேருமாம்.
மேற்கு திசையை நோக்கி காகம் கரைந்தால், மாமிச உணவு, மது வகைகள், நெல் முதலான தானியங் கள், முத்து, பவளம் போன்று கடலில் விளையும் பொருட்கள், உலர்ந்த பழ வகைகள் கிடைக்குமாம்.வடக்கு திசையை நோக்கி காகம் கரைந்தால் ஆடைகள், நல்ல உணவு மற்றும் வாகனங்கள் ஆகியன கிடைக்குமாம்.

Rental Bicycle

Rental Cycle: வாடகைக்கு விடும் கடைக்கு ஒருவன் வந்து ஒரு சைக்கிள் வாடகைக்கு ஒரு நாள் முழுக்க வேண்டும் என்று கேட்டான்.வந்தவனை கடைக்காரர் பார்த்தார்.அவனை அவர் இதற்குமுன் பார்த்ததே இல்லை.எனவே அவன் ஊருக்குப் புதுசா என்று கேட்க அவனும் ஆமாம் என்றான். ”ஏனப்பா,முன்னேபின்னே தெரியாத உன்னை நம்பி ஒரு சைக்கிளை ஒரு நாள் வாடகைக்கு எப்படி விட முடியும்?”என்று கேட்க அவன்,”அய்யா,எனக்கு அவசரமாய் ஒரு இடத்திற்குப் போக வேண்டியிருக்கிறது.என்னை நீங்கள் நம்பலாம்,”என்றான்.

Rental Cycle Owner: சைக்கிள் கடைக்காரர் சிறிது நேரம் யோசித்துவிட்டு,”சரி, சைக்கிளை நான் தருகிறேன்.ஆனால் நீ சைக்கிளின் விலைக்கு உண்டான பணத்தைக் கட்டி எடுத்துப்போ.நாளைக்கு சைக்கிளைத் திரும்பக் கொடுக்கும்போது உன் பணத்தை வாங்கிக் கொள்,”என்றார்.அவனும் சரியென்று கூறி அவர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்துச் சென்றான்.

மறுநாள் சைக்கிளைத் திரும்ப ஒப்படைத்ததும் கடைக்காரர் பணத்தைத் திரும்பக் கொடுத்தார்.அவனும் கிளம்பினான்,கடைக்காரர் என்னப்பா, வாடகை கொடுக்காமல் போகிறாயே?”என்று கேட்டார்.அவன் சொன்னான்,”நேற்று நான் சைக்கிளை உங்களிடம் விலைக்கு வாங்கினேன்.எனவே சைக்கிள் என்னுடையதாகி விட்டது.இன்று சைக்கிளை உங்களுக்கு விற்று விட்டேன்.இப்போது சைக்கிள் உங்களுடையது. என் சைக்கிளை நான் உபயோகப் படுத்தியதற்கு வாடகை எதற்குக் கொடுக்க வேண்டும்?”கடைக்காரர் செய்வதறியாது மௌனித்து நின்றார்.

One Dollar = One Rupee

ஒரு டாலரின் – one dollar மதிப்பு ஒரு ரூபாய்யாக – one rupee மாற (one dollar = one rupee),இந்தியா என்ன செய்யலாம் என்று பார்த்தால் Reserve Bank Of India விடம் கூறி இந்திய ரூபாய்களை அச்சடிக்க வைத்து நமது நாட்டின் மொத்த கடனையும் அடைக்கலாம் (அல்லது) வேறு ஒரு வழியும் இருக்கிறது,ஆனால் இதை சாத்தியம் ஆக்குவது கடினம்,அது என்னவென்றால் நம் நாட்டில் கருப்பு பணம் வைத்து இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து நமது நாட்டின் கடனை அடைக்கலாம்.

இப்படி ஒரு வழியாக நாம் நம் நாட்டின் கடனை அடைத்து விட்டோம் என்று வைத்துக்கொள்வோம்,அடுத்து என்ன ஆகும்? ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய்யாக மாறிவிடும்.இப்படி ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய்யானால் என்ன நன்மைகள் மற்றும் என்ன தீமைகள் நடக்கும் என்பதை பார்க்கலாம்.

ஒன்று,வெளிநாட்டுப் பொருட்களை நாம் மலிவான விலையில் வாங்க முடியும்,உதாரணத்திற்கு Iphone X -ஐ 1000 ரூபாய்க்கு வாங்கலாம்.இரண்டு,வெளிநாடுகளில் வேளைப் பார்க்கும் இந்தியர்கள் தன் சொந்த நாடு திரும்புவார்கள்.

மூன்று,பெட்ரோல்,டீசல் விலை குறையும்,மேலும் நம் நாட்டிற்க்கு இறக்குமதி ஆகும் பொருட்களின் விலையும் குறைந்து விடும்.
இந்த நன்மைகள் நடந்தால் நன்றாக இருக்கும் என்பது நம் எண்ணமாக இருந்தால்,அது கண்டிப்பாக இல்லை.இதன் மறுபக்கம் என்பது முற்றிலும் வேறு.

ஒன்று,இந்தியாவில் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்கள் மூடப்படும்.
இதனால் வேலைவாய்ப்பு இல்லாமல் போகும்.

இரண்டு,நம் நாட்டிற்கு இறக்குமதி ஆகும் பொருட்களை மலிவான விலைக்கு வாங்கி,நமது நாட்டில் உள்ள நிறுவனங்களின் பொருட்களை புறக்கணித்து விடுவோம்.

மூன்று,உலக சந்தையில் நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும்,எனவே இந்திய பொருட்களை வாங்க மறுத்துவிடுவார்கள்,பின் நமது பொருட்களுக்கு போட்டியாளராக இருக்கும் நாடுகளிடம் தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வார்கள்.

ஆனால் இந்த விஷயங்களை கடக்கவும் வழி உள்ளது,ஒரு டாலர் ஒரு ருபாய்யானால்,நமது நாட்டில் உள்ள அனைத்து விலை வாசியும் குறைந்து விடும்.பால் விலையில் இருந்து பெட்ரோல் விலை வரை அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைந்து விடும்,பின் நமது தேவைகள் என்பது பெரிதாக இருக்காது.

அப்போது,மாதம் 25000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு பொறியாளர் 3000 ரூபாய் சம்பளம் வாங்கினலே சந்தோஷமாக இருப்பார்,மேலும் தொழிலாளியாக இருந்த பலர் முதலாளியாக மாறி நம் நாட்டில் இருப்பவர்களுக்கும்,வெளி நாடுகளில் உள்ளவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கலாம்.

ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலையை சரியாக ரூபாய் மதிப்பிற்கு நிர்ணயம் செய்யலாம்,இதனால் நமது நாட்டிற்கு எந்த பாதிப்பும் வராது.