Loss!

என் வாழ்க்கை எவ்வளவு அழகாய் இருக்க வேண்டும் என்று என்னைக்காட்டிலும் அதிகம் கற்பனை செய்து பார்த்தவள் அவள்.

எட்ட முடியுமா என்று எட்டிநின்ற உயரங்களையெல்லாம் துச்சமென்று எண்ண வைத்தவள்..

இதுவரை யாருமென்னைப் பார்க்கா கோணத்தில் பார்த்து, என் வாழ்வின் கோணத்தை மாற்றியமைத்தவள்..

பாதைத் தேடி புதைந்து கிடந்த எனக்கு, புதிய பாதை அமைக்க விதைவிதைத்தவள்..

தனிமையில் இனிமையாய் இருந்தபோது அசரீரியாய் குரல் கொடுத்தவள்.

உலகப்போரினும் கொடிய உறவுப்போர் மனதில் தொடங்கிய வேளையில் கவசம் தரித்தவள்.

ரசனைகளுக்குள் ஒளியாண்டு தொலைவிருந்தும், மணிக்கணக்கில் அளந்த கதைகளில், ஒருவரையொருவர் அளந்தவள்.

பயங்களற்ற இதயச்சிரிப்பில், அடிவானை மீறிய உலகினழகைக் காட்டியவள்.

காலத்தின் கட்டாயங்களிலும் கல்லறை வரை கவலைகளை மறக்கச் செய்தவள்.

துயர் போக்கி தோள் சாய, தோல்விகளும் துவண்டு போகுமாறு துணை நிற்பவள்.

சொல்லாமற் சொல்லும் வார்த்தைகளுக்கு புதுப்புது அர்த்தங்கள் கொடுத்தவள்.

அவளின்றி ஓரணுவும் என்வாழ்வில் நகராது என்றறிந்தும், வேண்டுமென்றே நகர்ந்து செல்பவள்..

சகிப்பென்றால் கேள்விக்குறி எழுப்பியவனை, கோபத்திற்கு கேள்விக்குறி எழுப்பச் செய்தவள்.

இருப்பினும்,
எதோவோர் தருணத்தில் பிரிவை எதிர்நோக்கிக் காத்துள்ளேன்…

எழுத ஊக்கங்கொடுத்த அவளுக்கே எழுதுகிறேன்,

“காலத்தின் கலக்கங்களில் கலங்காது
ஞாலத்தை வென்று களிக்கையில்
நானுமிருக்க வேண்டிய தருணம்
எனும் அகநெருடலில் எட்டிப்பார்க்கும்
கண்ணீர் துளிகள் அளக்கும்,
வான்வியக்கும் கடலாழ நட்புறவை!”

யாரவள் என்றவள் அறிவாள் தன் அறிவால்!!!!

-சாரா.

Beauty Lies in the Heart ♡

உள்ளத்தை மட்டும் பாருங்கள்.

ஒரு முறை நான் அமெரிக்கா செல்லும்பொது ஜன்னல் சீட் அருகில்அமர்ந்திருந்தேன் அப்போது ஒரு பெரிய உருவம் என் அருகில் வந்துஅமர்ந்தது. என்னுடைய சீட்டின் முக்கால்வாசி இடத்தை அடைத்து கொண்டு உட்கார்ந்திருந்தார்.நான் வேறு வழி இல்லாமல் ஜன்னல் ஓரம் ஒண்டிக்கொண்டேன்.அந்த பெண்மனி என்னை பார்த்து ஹாய் என்றார், நானும் வேண்டாவெறுப்பாக ஹாய்என்றேன்.இந்த அம்மாவோட எப்படி தான் உட்கார்ந்து போவதோ என்று எண்ணியபடி ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

ஒரு பெரிய கை என் முகத்துக்கு நேராக நீட்டியது என் பெயர் லாரா என்றாள் நான் அமேரிக்கா நீங்களும் அமேரிக்காவா என்றாள்.இல்லை மலேசியா என்றேன் சலிப்போடு.ஓ சாரி நீங்க அமெரிக்கான்னு நினைச்சேன் ,இன்னும் 6 மணி நேரம்
ஒன்றாக பிரயானம் பண்ணப்போகிறோம் கை கொடுங்க ஜாலியா பேசிட்டே போகலாம் என்றாள்.நானும் வேறி வழி இல்லாமல் கையை நீட்டினேன்.

அந்த அம்மா அவர்களை பத்தி பேச ஆரம்பித்தார்கள் தான் ஒரு டீச்சர் என்றும் தன் மாணவர்களுக்கு நிறைய பொருட்கள் வாங்கி கொண்டு போவதாகவும் தன் குடும்பத்தார் தனக்காக ஏர்போர்டில் காத்து கொண்டு இருப்பார்கள் என்றும் சொல்லிகொண்டே வந்தாள் .நான் எல்லாவற்றிற்கும் ஒரு வரியில் பதில் சொல்லி கொண்டு வந்தேன்.அவர் பேசும்போது நன்கு படித்தவர் என்பதும் சைக்காலஜி நன்கு தெரிந்தவர்என்பதும் அவர் மேல் எனக்கு மரியாதை ஏற்படுத்தியது.

பணிப்பெண் எங்களுக்கு உணவு கொண்டு வந்தார்.இருவரும் எடுத்து கொண்டோம்.பணிப்பெண்னிடம் உங்கள் இந்த சேவைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்க்ள் என்றார்.பணிப்பெண் சிரித்துக்கொண்டே போனார்.யானை மாதிரி இடத்தை அடைத்து கொண்டு உட்கார்ந்து இருக்கேன் நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொள்கிறேன் நீங்கள் ப்ரீயா சாப்பிடுங்கள் என்றார்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி அந்த பெண் மேல் எரிச்சலடைந்த நான் இப்போது அவர் பேசபேச சிரித்து ரசித்து கேட்டு கொண்டு வருகிறேன்.அந்த அம்மா பேசுவதை எல்லாரும் ரசித்து கேட்டு கொண்டு வந்தனர்.ஆரம்பத்தில் அவர் உருவத்தை பார்த்து கேலி செய்தவர்கள் இப்போது அவருடன் ஆவலாக பேசிக்கொண்டும் சிரித்து கொண்டும் வந்தார்கள்.அந்த விமானத்திலேயே அவர் தான் Centre of attraction .

நீங்கள் உங்கள் உடம்பை குறைக்க எதாவது முயற்சி எடுத்தீர்களா என்று கேட்டேன்.இல்லையே நான் ஏன் என் உடம்பை குறைக்கனும்.குண்டாக இருந்தால் இதய நோய் வரும் அதுனாலத்தான் சொன்னேன் என்றேன்.கண்டிப்பாக கிடையாது ,முழு நேரமும் எடையை பற்றி கவலைப்பட்டுக் கொண்டு இருக்கின்ற உங்களை மாதிரி ஆட்களுக்கு தான் இதய நோய் வரும்.விளம்பரங்களில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்’ உங்கள் உடல் குண்டாகஇருக்கிறது என்று தாழ்வு மனப்பான்மையா எங்களிடம் வாருங்கள் ‘என்று விளம்பரப்படுத்துவார்கள்.

நான் பிறக்கும்போதே குண்டாக பிறந்தேன் ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறேன் நன்றாக நடக்கிறேன்.எனக்கு எந்த கவலையும் கிடையாது.எனக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும்போது உடல் இடையை குறைக்க நான் ஏன் என் நேரத்தை வீணடிக்க வேண்டும்.மற்றவர்கள் தான் என்னை பார்க்கும்போது குண்டு என்றும் சோம்பேறியாக

இருப்பாள் என்றும் நினைக்கிறார்கள்.நான் உடல் அளவில் தான் பெரியவள் ஆனால் மனதளவில் நான் குழந்தை.உங்களைவிட எனக்கு மனதளவில் தைரியம் ஜாஸ்தி.உங்கள் பின்னாடி ஆண்கள் துரத்தி இருக்கிறார்களா என்று விளையாட்டாக கேட்டேன்.ஆமாம் துரத்தி இருக்கிறார்கள் என்றார்.நிறைய ஆண்கள் உருவத்தை பார்ப்பதில்லை மனதை மட்டுமே பார்ப்பவர்கள்.எனக்கு திருமணம் ஆகிவிட்டது இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர் என்றார்.நான் டீச்சராக இல்லாமல் இருந்தால் பெரிய ஆலோசகராக மாறி இருப்பேன்.நிறைய ஆண்கள் என்னிடம் வந்து ஆலோசனை கேட்பார்கள்.

கடவுள் எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார் அதை என் பெரிய உருவத்தில் வைத்து மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்.என் எடையை குறைத்து என் சந்தோஷத்தை நான் இழக்க விரும்பவில்லை.நிறைய பெண்கள் திருமணத்திற்கு பிறகு குண்டாகி விடுகிறார்கள் அதற்காக அவர்கள் கணவர்கள் அவர்களை வெறுப்பதில்லை.

லாரா பேச்சை கேட்டு விமானத்தில் இருந்த அனைவரும் கை தட்டினர்.விமானம் தரை இறங்கியதும் லாராவை அழைத்து செல்ல பெரிய உருவம் கொண்ட அவர் உறவினர்கள் வந்திருந்தனர்.பயணம் செய்த அனைவரும் லாராவுக்கு டாட்டா காட்டி வழி அனுப்பி வைத்தனர்.லாரா போகும்போது என்னை பார்த்து கண்ணடித்துவிட்டு சென்றாள்.

நான் பார்த்த பெண்களிலே இவளை போன்று ஒரு அழகியை பர்த்தது இல்லை என்று என் மனம் சொல்லியது.நண்பர்களே மனிதர்களின் உடலை பார்க்காதீர்கள் உள்ளத்தை மட்டும் பாருங்கள். உடல் பருமன் ஒரு குறை அல்ல.நல்ல பதிவுகளை அதிகமாக பகிருங்கள்…இந்த பதிவு குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி… மேலும் இது போன்ற சுவாரிஸ்யமான பதிவுகளை படிக்க தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி. .

Daasi and Sanyasi – Spiritual Story

ஒரு தாசியின் வீடும், சந்நியாசியின் குடிலும் அருகருகே இருந்தன.தாசியின் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து போவதை சந்நியாசி கவனித்தார்,ஒருநாள் அவளைஅழைத்து,“கொடிய தொழில் செய்யும் நீ, பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாய்.இறை வழிபாட்டுக்காக என் குடிலுக்கு வந்து போகும் பக்தர்களுக்கு, உன் தொழில் இடையூறாக இருக்கிறது. நீ இதை விட்டுவிடு! வேறு ஏதேனும் தொழில் செய்,”-என்று அறிவுரை சொன்னார்.

அவள் அதைக்கேட்டு நடுங்கினாள்.
“சுவாமி! எனக்கு மட்டும் வேறு தொழில் செய்யும் ஆசை இல்லையா? பாவப்புதையலுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு, வேறு வேலை தர எல்லாரும் மறுக்கிறார்களே! ஒழுக்கம் கெட்டவளை வீட்டு வேலைக்கு சேர்த்தால் என் கணவனுக்கும், வாழ்க்கைக்கும் அல்லவா ஆபத்து- என்று குடும்பப்பெண்கள் என்னைக் கடிகிறார்களே!
நான் என்ன செய்வேன், இருப்பினும், இதை விட்டுவிட முயற்சிக்கிறேன்,” என்றாள்.

பட்டினி கிடந்தேனும் செத்து விட முடிவெடுத்தாள்.
ஒவ்வொரு நாளும் தான் செய்த பாவத்தொழிலுக்கான மன்னிப்பு வேண்டி இறைவனிடம் ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்தாள்.ஆனால், பாழும் சமுதாயம் அவளை விடவில்லை.
“உன் பரம்பரையே இந்தத்தொழில் செய்து தானே பிழைத்தது. நீயும் கெட்டுப்போனவள் தானே!
இப்போது பத்தினி போல் நடிக்கிறாயா?” என்று கேவலமாகப் பேசியதுடன், அவளை வலுக்கட்டாயமாகவும் இழுத்துச் சென்றனர் சில மாபாதகர்கள்.

வேறு வழியின்றி அதையே அவள் தொடர்ந்தாள்.
இறைவனிடம் தன் நிலையைச் சொல்லி அழுதாள்.
அவளது மனமாற்றத்தை அறியாத சந்நியாசி, தான் சொல்லியும் அந்தப்பெண் கேட்கவில்லையே என கோபமடைந்தார்.ஒவ்வொரு நாளும் அவளது வீட்டுக்கு வந்து போகும் ஆண்களின் எண்ணிக்கை அளவுக்கு கூழாங்கற்களை எடுத்து ஓரிடத்தில் போட்டார். அந்தக்குவியல் தினமும் உயர்ந்து கொண்டே வந்தது.

ஒருநாள் அவளிடம் அந்தக்குவியலைக் காட்டி,
“நீ செய்த பாவத்தின் அளவைப் பார்த்தாயா! சொல்லச்சொல்ல கேட்க மறுக்கிறாயே!” என்று கடிந்து கொண்டார்.அந்தக்குவியலைக் கண்டு மலைத்த அந்த அப்பாவி பெண் இறைவனிடம்,
“கடவுளே! இனியும் இந்தத்தொழில் எனக்கு வேண்டாம். தற்கொலை செய்வது பாவம் என்கிறார்கள். இல்லாவிட்டால், அதை செய்திருப்பேன். நீயாக என் உயிரை எடுத்துக் கொள்,”என்று கதறியழுது பிரார்த்தித்தாள். அவளது கோரிக்கையை இறைவன் ஏற்றான்.

அன்றிரவே அவளது உயிர் போனது.
சந்நியாசியும் அதே நாளில் இறந்தார்.
தாசியின் உடலை ஊர் எல்லையில் இருந்த காட்டுக்குள் வீசி விட்டனர் அருகில் இருந்தவர்கள்.
நரிகளுக்கும், நாய்களுக்கும் அவளது உடல் விருந்தானது.

சந்நியாசியை மலர்களால் அலங்கரித்து, மலர் பல்லக்கில் ஏற்றி முறைப்படி அடக்கம் செய்தனர்.
அந்த ஆத்மாக்கள் விண்ணுலகம் சென்றன.
அங்கிருந்தவர்கள் எமதூதர்களை அழைத்து, தாசியை சொர்க்கத்துக்கும், சந்நியாசியை நரகத்துக்கும் அனுப்பக்கூறினர்.
சந்நியாசி கதறினார். “”பாவிக்கு சொர்க்கம், எனக்கு நரகமா?” என்றார்.

“”துறவியே! அவள் உடலால் தவறு செய்தாள்.
மனதால் இறைவனைப் பிரார்த்தித்தாள்.
அதனால் அவளது உடல் பூலோகத்தில் மிருகங்களுக்கு இரையானது. நீர் பூலோகத்தில் உடலால் தவறு செய்யாததால், உம் உடலுக்கு அங்கே மரியாதை கிடைத்தது. ஆனால், மனதால் தாசியின் பாவச்செயலை மட்டுமே சிந்தித்தீர்.

அதனால், இறைவழிபாட்டில் முழுமையாகக் கவனம் செலுத்தவில்லை. எனவே உமக்கு நரகம்,” என்றனர்.
இறைவனுக்கு உடலை விட மனமே முக்கியம் என்பது தெளிவாகிறதல்லவா.

Rental Bicycle

Rental Cycle: வாடகைக்கு விடும் கடைக்கு ஒருவன் வந்து ஒரு சைக்கிள் வாடகைக்கு ஒரு நாள் முழுக்க வேண்டும் என்று கேட்டான்.வந்தவனை கடைக்காரர் பார்த்தார்.அவனை அவர் இதற்குமுன் பார்த்ததே இல்லை.எனவே அவன் ஊருக்குப் புதுசா என்று கேட்க அவனும் ஆமாம் என்றான். ”ஏனப்பா,முன்னேபின்னே தெரியாத உன்னை நம்பி ஒரு சைக்கிளை ஒரு நாள் வாடகைக்கு எப்படி விட முடியும்?”என்று கேட்க அவன்,”அய்யா,எனக்கு அவசரமாய் ஒரு இடத்திற்குப் போக வேண்டியிருக்கிறது.என்னை நீங்கள் நம்பலாம்,”என்றான்.

Rental Cycle Owner: சைக்கிள் கடைக்காரர் சிறிது நேரம் யோசித்துவிட்டு,”சரி, சைக்கிளை நான் தருகிறேன்.ஆனால் நீ சைக்கிளின் விலைக்கு உண்டான பணத்தைக் கட்டி எடுத்துப்போ.நாளைக்கு சைக்கிளைத் திரும்பக் கொடுக்கும்போது உன் பணத்தை வாங்கிக் கொள்,”என்றார்.அவனும் சரியென்று கூறி அவர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்துச் சென்றான்.

மறுநாள் சைக்கிளைத் திரும்ப ஒப்படைத்ததும் கடைக்காரர் பணத்தைத் திரும்பக் கொடுத்தார்.அவனும் கிளம்பினான்,கடைக்காரர் என்னப்பா, வாடகை கொடுக்காமல் போகிறாயே?”என்று கேட்டார்.அவன் சொன்னான்,”நேற்று நான் சைக்கிளை உங்களிடம் விலைக்கு வாங்கினேன்.எனவே சைக்கிள் என்னுடையதாகி விட்டது.இன்று சைக்கிளை உங்களுக்கு விற்று விட்டேன்.இப்போது சைக்கிள் உங்களுடையது. என் சைக்கிளை நான் உபயோகப் படுத்தியதற்கு வாடகை எதற்குக் கொடுக்க வேண்டும்?”கடைக்காரர் செய்வதறியாது மௌனித்து நின்றார்.