Veerappan: The Untold Story!

வீரப்பன் – Veerappan என்ற பெயரை சொன்னாலே பல பேருக்கு ஈரக்கொலை நடுங்கும், அப்படிப்பட்ட வீரப்பன் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? தெரிந்துகொள்ளலாமா?

வீரப்பன் வரலாறு – Veerappan History :

1952ஆண்டு ஜனவரி மாதம்,கோபிநத்தம் என்ற ஊரில் பிறந்தார்,முத்து லட்சுமி என்ற அம்மையாரை திருமணம் செய்தார் வீரப்பன்,இவர்களுக்கு 2 பிள்ளைகளும் பிறந்தார்கள், இது சொந்த வாழ்க்கை. 1962 ஆம் ஆண்டு தன் 10 வயதில் யானை ஒன்றை வேட்டையாடி, மேலும் 3 வனத்துறை அதிகாரிகளை கொன்றார் வீரப்பன்,இதுவே அவரது முதல் குற்றமாகும்.

தன் ஊரில் பெரியவர் ஒருவரோடு சேர்ந்து சந்தன மரத்தை வெட்டி அதனை கடத்தி பணம் ஈட்டினார். இப்படி சந்தன கடத்தலில் 4 வகையான கூட்டம் இருந்தது, அதில் விரப்பனும் தனக்கென்று தனி கூட்டத்தை சேர்த்ததார். சந்தன மரங்களை வெட்டுவது அரசுக்கு எதிரானது என்பதால் வனத்துறை அதிகாரிகளுக்கும்,காவல்துறைக்கும் நெருக்கடி அதிகம் ஆகியது.

அப்போது, காவல் துறை வீரப்பனை அழைத்து நீ மற்ற கூட்டத்தின் தலைவர்களை கொன்று விட்டு, தனியாக இத்தொழிலை செய், எங்களுக்கும் கெடு பிடி அதிகம் ஆகிவிட்டது என்று கூற மீதி இருப்பவர்களை வெட்டி காவேரி ஆற்றில் வீசுகிறார் வீரப்பன்.இப்பொழுது சந்தன கடத்தல் தொழிலில் மீதம் இருப்பது வீரப்பன் மட்டும் தான்,ஆனால் காவல் துறை அவரை கைது செய்கிறது..கைது செய்து சிறையிலும் அடைக்கிறது.

சிறையில் இருந்த காலகட்டத்தில், அவரை காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து கொல்லப் போவதாக ஒரு காவல் துறை அதிகாரியின் மூலமாக வீரப்பனின் காதுகளில் விழ,அவர் அந்தச் சிறையை விட்டு தப்பித்தார்..காவல் துறை நமக்கு தோரோகம் இழைத்து விட்டது என்று எண்ணிய வீரப்பன் இங்கு தான் கோபம் அடைகிறார்..பின் வீரப்பன் காடு என்ற காட்டில் தன் கோட்டையை நிறுவினார் வீரப்பன், 14000 sq.km பரப்பளவை கொண்டது இக்காடு.

இப்போது காவல்துறை அதிகாரிகளை பழி தீர்க்கவும் ஆரம்பித்தார்,1990-களில் கர்நாடகவை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்ற உயர் காவல் துறை அதிகாரியை கொன்று, அவர் தலையை கழுதையின் மேல் வைத்து அனுப்பினார் வீரப்பன்.. இப்படி தொடர்ந்து காவல் துறை மீது 3 கொலைகள் நடக்க, கர்நாடக மாநிலம் வீரப்பனை பிடிக்க ஹரி கிரிஷ்ணா என்ற SP தலைமையில் காவல் படையை காட்டிற்குள் அனுப்புகிறது.இது செய்தியாக கூட வந்தது.

சில நாட்களில் 40 பேரை வீரப்பன் கொன்றதாக செய்தி பத்திரிகை ஒன்றுக்கு வர காவல் துறையில் 6 பேர்  மட்டுமே இறந்ததாக தகவல் வந்தது. SP, Inspector போன்ற 6 பேர் மட்டுமே இறந்ததாக காவல் துறை கூறியது..அந்த காலத்தில் வீரப்பன் முகத்தில் மீசை இருக்காது.

90-களில் வீரப்பன் அவர்களை பிடித்து தந்தால் 40 லட்சம் பரிசு தொகை அறிவிக்க பட்டு இருந்தது.93-களில் Bomb Blast ஒன்று பாலாற்றில் நடந்தது.இதில் 22 காவல் அதிகாரிகள் இறந்தனர்கள்.

இதன் பின்பு தான் பிரபல பத்திரிகை ஒன்று வீரப்பனை பேட்டி எடுத்து அவரின் புகைப்படங்களை வைத்து இருந்தது,முதல் முதலில் வீரப்பன் மீசையுடன் காட்சியளித்தது அந்த புகைப்படங்களில் தான்.

இந்த பாலாறு Bomb Blast சம்பவத்திற்கு பிறகு அந்த பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்களுக்கு காவல் துறை அதிகாரிகள் பாலியல் தொல்லைகள் மற்றும் பல இன்னல்களை கொடுத்து உள்ளார்கள் எனவும் பத்திரிகை ஒன்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

93-களில் வீரப்பனின் கடத்தல்கள் அதிகம் ஆக, பத்திரிகைகள் உண்மை செய்தியை கொண்டு வர, காவல் துறை அதிகாரிகள் தவறான செய்திகளை மட்டுமே பரப்பி வந்தாக தகவல்.

இம்மாதிரியான கொடுமைகள் தன்னால் மக்கள் அனுபவிக்கிறார்கள் என தெரிந்த பின்,130 கொலைகள் செய்த வீரப்பன் தான் சரண் அடைகிறேன் என்று கூற பத்திரிகை ஆசிரியர் ஒருவர் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிடையே தூதுவராக செல்கிறார்..அப்படி செல்லும் முன் விரப்பனிடம் ஒரு கோரிக்கையும் வைக்கிறார். நீங்கள் இன்று முதல் யாரையும் கொலை செய்யக்கூடாது, கடத்த கூடாது, அப்படி என்றால் உங்கள் சரண்டர் பற்றி நான் பேசுகிறேன் என்று கூறுகிறார்.

பத்திரிகை ஆசிரியர் கூறிய படி 2 வருடங்கள் வீரப்பன் எந்த வித தீய வழிகளிலும் ஈடுபடவில்லை. இதனிடையே காவல் துறை இவர் எந்த தவறும் செய்யாமல் இருப்பதை பார்த்து வீரப்பனை கொல்ல சரியான தருணம் இது தான் என்று களத்தில் இறங்க,வேறு வழி இல்லாமல் 1997-ல் மீண்டும் 9 காவலர்களை கடத்துகிறார்.

இதன் பின் அன்று இருந்த இரண்டு மாநில முதல்வர்களும் ஒன்று சேர்ந்து நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களை அரசு தூதுவராக அனுப்புகிறார்கள்.

இத்தியாவிலேயே இப்படிப்பட்ட சம்பவம் இன்று வரை நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.பின் 2000த்தில் கர்நாடகா சூப்பர் ஸ்டார் ராஜ் குமார் அவர்களை கடத்தினார் வீரப்பன்..108 நாட்களுக்கு பிறகே ராஜ் குமார் வெளியே வந்தார்.

2004 ஆம் ஆண்டு விஜய குமார் தலைமையில் ஒரு குழு சென்று, வீரப்பனை கொன்றதாக ஒரு தகவலும்..விஷம் வைத்து தான் வீரப்பன் கொல்லப்பட்டார் எனவும் இரண்டு விதமான தகவல்கள் உள்ளது. இதில் எது உண்மை என்று இன்று வரை தெரியவில்லை.

ஆனால் காவல்துறையின் தகவல்களின் படி வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டார் என்பதே ஆகும்.

வீரப்பனின் சுவாரஸ்யமான கதைகள் – Interesting Stories of Veerappan:

வீரப்பனின் சில சுவாரஸ்யமான தகவல்கள் சில, அதனை மேலும் அறிய கீழ் வரும் உண்மை கதையை படியுங்கள், கோயம்புத்தூரில் 1997-ல் விழா ஒன்று நடந்தது அதில் வீரப்பனை பிடிக்க முயன்ற உயர் அதிகாரி ஒருவர் மேடையில் சொன்ன தகவல் இது, 1990-களில் காவல் துறை அதிகாரிகள் சந்தன கட்டைகளை மீட்க ஒரு ஏற்பாடு செய்தார்கள்.

அந்த ஏற்பாட்டிற்கு முன் தமிழ் நாட்டை சேர்ந்த 6 உயர் காவல் துறை அதிகாரிகள் மட்டும்,வட்டாமாக அமர்ந்து பேசினோம் அதில் நானும் ஒருவன்.

என்ன பேசினோம் என்றால் நாம் கைப்பற்றப் போகும் சந்தன கட்டைகளை நாம் மட்டும் பிடித்ததாக தமிழக அரசாங்கத்திற்கு கணக்கு காட்ட வேண்டாம், கர்நாடக அரசு போலீசாரும் இதை பறிமுதல் செய்ததாக அரசாங்கதிடம் கணக்குகளை காட்டலாம், எனவே நம்ம 50 அவங்க 50 ..50-50 என்ற கணக்கே அரசாங்கத்திற்கு காட்டுவோம் என தங்களது பேச்சை முடித்துக் கொண்டு,2 வாகனங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் காவல்துறை அதிகாரிகளையும் அனுப்பினார்கள் அந்த 6 பேரும், சென்ற வாகனம் 3 நாட்கள் ஆகியும் திரும்ப வில்லை.என்னடா இது இன்னும் வர வில்லை என என்னிய அதிகாரி, நேரில் சென்று பார்க்க புறப்பட்டார்..(மேடையில் பேசுபவரே அங்கு சென்றது)

அங்கு சென்று பார்த்தால், வாகனம் இரண்டும் எரிந்து கிடந்தது,காவல் துறை அதிகாரிகள் மரத்தில் கட்டிவைக்க பட்டு இருந்தார்கள்..தண்ணீரை முகத்தில் தெளித்து அவர்களை தெளிய வைத்தபின் அவர்கள் கூறியது என்ன தெரியுமா? நாங்கள் இங்கே வந்து சந்தன கட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தோம், அப்போது பெரிய மீசை வைத்த ஒருவர் 150 பேருடன் வந்தார்,எங்களை மரத்தில் கட்டி வைக்க சொன்னார்.பின் உங்களுக்கு என்னடா 50-50 என்று எங்களை கேட்டார்.

பின் 150 பேரும் சந்தன கட்டைகளை பிரித்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர் என்று அந்த அதிகாரி கூறினாராம்.

இப்போது மேடையில் அந்த உயர் அதிகாரி சொன்னது” நாங்கள் 6 பேர் மட்டுமே அந்த 50-50 என்ற வார்த்தையை பேசினோம். அது எப்படி விரப்பனிற்கு தெரிந்தது என்பது தான். இந்த மொத்த கதையையும் கூறியவர் ஒரு D.I.G.

இவ்வளவு செய்தாலும் காமராஜரை பற்றி,எம்.ஜி.ஆரை பற்றி, உலக அரசியல் பற்றி என அனைத்தையும் தெரிந்து வைத்து இருந்தார்.காட்டில் வீரப்பனின் நோய் நொடி ஏற்பட்டால் மருத்துவராகவும் இருந்து அவர்களை குணப்படுத்தினார்.

உணவுகளை 100கி.மி ஒரு இடத்தில் மண்ணில் புதைத்து வைத்து, காட்டில் இடம் பெயரும் பொழுது அதனை பயன்படுத்துவார், இலங்கை தமிழர்களை பற்றியும் பல கருத்துக்களை பதிவு செய்துள்ளார் வீரப்பன் – Veerappan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *